பேராசிரியர் டாக்டர் சிங்கராஜ்

என்னைக் கவர்ந்த ஆசான்...
சிங்கம் நிகர் சிங்கராஜ்...
நடமாடும் பொதுவியல்
பொறியியல் புத்தகம் அவர்..
அவரிடம் நாங்கள் கற்றது
பாடங்கள் மட்டுமல்ல
வாழும் முறைகளும் கூட...

பெருமைக்குரிய பேராசிரியரே..
உங்களிடம் பாடம் பயின்ற
நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்..
உங்களிடம் பயின்ற பாடங்களில்
தலைமுறைகள் மிளிரும்.. ஒளிரும்..

தானும் மாணவனாய்
இருந்து வந்தவன்...
தன் மாணவனும்
தன்னைப் போன்றும்
இன்னும் பல உயர்வுகளையும்
பெறப் போகிறவன் எனும்
அளவீட்டை எப்போதும்
தன்னோடு கொண்டிருப்பார்...
கண்டிப்பாய் இருக்க நினைத்து
கனிவையே ஜெயிக்க விடுவார்...

விரைந்து முடிவெடுத்தல்...
விவேகமாய் முடிவெடுத்தல்..
ஆகியவற்றிற்கு சொந்தக்காரர்...
எனது மூன்றாம் ஆண்டு
பொறியியல் படிப்பில்
கல்லூரி விடுதியில்
அனுமதிக்கப்பட்ட இடங்கள் மீறி
எனக்கு கூடுதலாய்
ஒரு இடம் கொடுத்தார்...
வைப்புத்தொகை கட்ட
கால அவகாசமும் கொடுத்தார்..

தேர்வுகளில் எழுதிய விடைகளுக்கு
நிறைய மதிப்பெண்கள் கொடுப்பார்...
மாணவன் பின்னர் கற்கப் போகும்
திறனறிந்து அதற்கும் கொஞ்சம்
மதிப்பெண் சேர்த்து வழங்குவார்..

மதுரை பொறியியல் கல்லூரிக்கு
மாணவர்களை அழைத்துச் சென்றார்..
எக்ஸ்பெரிமென்டல் ஸ்ட்ரெஸ்
அனாலிஸிஸ் ஆய்வகம்
சுற்றிக் காட்டினார்...
நிறைய ஸ்ட்ரெய்ன் எடுத்து
ஸ்ட்ரெய்ன் கேஜ் செயல்முறை
கற்றுத் தந்தார்...
அழகர் கோவில் கூட
கூட்டிச் சென்றார்...
எல்லாம் கோர்வையாய்
நினைவிற்கு வருகிறது...

சென்னை... கிண்டி...
தொழில் நுட்பக் கல்வி
இயக்குனரகத்தில் திட்டத் துறை
உதவி இயக்குநனராய்
பேராசிரியர் பணியாற்றிய போதும்
அவரிடம் கற்றுக் கொண்ட
விஷயங்கள் நிறைய நிறைய..

பேராசிரியர் டாக்டர்
என்.எம். சிங்கராஜ் அவர்களிடம்
நான் ஒருவன் பெற்றது இவ்வளவு...
அவரிடம் கற்றதும் பெற்றதும்
இன்னும் எத்தனை எத்தனை பேரோ
எந்தெந்த ஊரோ...
அவரிடம் கற்றதைக் கொண்டு
என்னென்ன புதுமைகள்
உலகத்திற்கு செய்கிறாரோ...

உலகத்தின் ஓட்டத்தை
ஒழுங்கு படுத்தியதில்
தன் பங்கினை உவந்து அளித்த
பேராசிரியர் சிங்கராஜ்
அவர்களின் மறைவுச் செய்தி
மிகத் துயரம் தருகிறது...
பேராசிரியரின் ஆன்மா
இறைவனடி நிழலில்
அமைதி கொள்ளட்டும்...
ஆழ்ந்த இரங்கல்கள்...
💐💐💐🙏🙏🙏

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (2-Jun-21, 12:45 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 34

மேலே