கானல் நீரின் கடல் 555
***கானல் நீரின் கடல் 555 ***
தோழியே...
வலிகள் கற்று
கொடுக்கும் பாடத்தில்...
வாழ்க்கையை நாம்
கற்றுகொள்ள வேண்டும்...
முயற்சி வேண்டும்
சாதனை கொள்ள...
முயற்சியில்தான் பறையும்
கையெடுத்து வணங்கும் உருவமாகும்...
மனமும்
அலைகளும் ஒன்று...
மனம்
மாறிக்கொண்டே இருக்கும்...
அலைகள்
வந்துகொண்டே இருக்கும்...
சமுத்திரம் போல் கானல்
நீர் காட்சியளித்தாலும்...
தொலைவில் இருந்து பார்க்கும்
கண்களுக்கு மட்டும்தான் அழகு...
அருகில்
சென்றால் ஏமாற்றம்தான்...
உடன் இருந்தால்
உறவுகள் என்பார்கள்...
பிரிந்தால்
நினைவுகள் என்பார்கள்...
உறவும் பிரிவும்தான்
நம் வாழ்வின் இரு கோடுகள்...
மலர போகும்
மொட்டுக்கள் எதுவென்று...
தெரியாததுதான்
நம் வாழ்க்கை.....
***முதல் பூ பெ.மணி...***
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
