கொரோனா அழிந்துவிடும்
உனது கொக்கரிப்பும் ரத்தவெறித் தாண்டவமும்
கண்டு காத்துக் கொள்ள எப்படித்தான்
என்று ஒன்றும் புரியாது தவிக்கும் மக்கள்
கொரோனாசுரனே நீ கண்ணுக்குப் புலப்படாது
உலகைத் தாக்கி ஒட்டு மொத்தமாய்
அழித்திட எண்ணினாலும் முடிவில் உன்னழிவு
உறுதி அறிந்திடுவாய்.... இப்படித்தான்
உலகை இடை ஆறாது துன்புறுத்தி வந்த
இரணியர்கள் ராவணர்கள் முடிவில் மாய்ந்தனர்
' பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்மம் ஸ்தம்பநார்த்தாய சம்பவாமி யுகே யுகே..'
கண்ணன் வாக்கு தப்பாது
கொரோனா அழிவும் தப்பாது