அழிக்கக்கூடாதா

பகவான் படைத்ததாய்
போற்றப்படும் இயற்கை கூட
பஞ்ச பூதங்களால்
பாழ்பட்டு அழியுமென்றால்
பாவம் மக்கள்

இயற்கைக்கே
இந்த கதியென்றால்
இயற்கை படைத்த
உயிர்களெல்லாம் எந்த மூலை
யாரிடம் முறையிட !

கடலுக்குள்ளே எழும்
பூகம்பத்தின் சீற்றத்தால்
பூலோகத்தையே
புரட்டிபோட்டு—மக்களின்
உயிர்களை பறிப்பதுபோல

பூமியிலும் பூகம்பம்போல் ஒன்று
பவனி வருகிறதோ—அது
கொரோனா என்ற பெயரில்
உருவத்தை மாற்றி, மாற்றி
வாழும் உயிர்களை அழிக்கிறதோ !

கடமையை எமன்
குறைவாய் நிறைவேற்ற
எருமையை படைத்த இறைவனே ,
வேகமாக செயல்படும் கொரோனாவை
வேரோடு அழிக்கக் கூடாதா !

எழுதியவர் : கோ. கணபதி. (4-Jun-21, 12:48 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 34

மேலே