கலாச்சாரம்
இவன் அவள்
இருவரும் பார்த்துக்கொண்டனர்..
இருவர் இதயங்களும்
இணைந்தன...
இருவரும் இணைந்தனர்
இருபது நாட்கள் கடந்தன
இருபத்தியோராம் நாள் வந்தது..
இருவரும் முறைத்தனர்,
இதயங்களை போட்டு உடைத்தனர்..
இதயம் ஒன்று கேட்டது
இவர்களுக்கு என்னவாயிற்று?
இதயம் இரண்டு சொன்னது
இதுதான் இன்றைய
கலாச்சாரம் என்று...
_______________________________

