மரம்
🌳மரம்🌳
( சுற்றுச்சூழல் தினம்)
இறந்த என்னுடல் இன்றைக்கு ,
மனிதக் கட்டையால் வேகிறது !
விதையில் இதை நான் அறிந்திருந்தால்,
பறவைக்கு உணவாய்க் கிடைத்திருப்பேன் !
மனிதன் கையால் வெட்டுண்டு ,
மரணிக்கும் நிலையென தெரிந்திருந்தால் ,
செடியாய் நானும் இருக்கைலே , சில
விலங்குக்கு உணவாய் கிடைத்திருப்பேன் !
இலைதழை பூக்கள் காய்கனிகள் ,
எத்தனை அள்ளிக் கொடுத்திருப்பேன் !
இளைப்பாற உனக்கு நிழல் கொடுத்து ,
எப்போதும் வெய்யிலில் காய்ந்திருப்பேன் !
என் ஒரு பழ விதைகளை எண்ணிவிட ,
இன்றைக்கும் மனிதா கணக்குண்டா !
எண்ணி எண்ணி மரம் நட்டு ,
இயற்கை மீள போவதில்லை !
மரத்தை அனைத்தையும் வெட்டிவிட்டு ,
தினத்தை நீயும் கொண்டாட ,
அசுரன் போன்றதா என்வாழ்வு ,
அப்படி யாருக்கு தீங்கிழைத்தேன் !
இன்றைய காலச் சூழலிலே ,
இறந்தவர் போக மீண்டவர் இருந்து !
அங்கு பள்ளிகள் திறந்திட்டால் ,
அவனும் வரலாறு படித்திட்டால் ,
கற்காலம் போன்றொரு மரக்காலம் ,
படம் பார்த்து என்னை படிக்கட்டுமே !
அன்று -
வீடுகள் தோறும் என்னுருவம் ,
விதைகள் இன்றியே முளைத்திருப்பேன் !
பிரிந்து விரிந்து குழைகளொடு ,
பிளாஸ்டிக் மரமாய் நான் நிற்பேன் !
நீரும் எனக்குத் தேவையில்லை ,
வேரும் அங்கே எனக்கில்லை. !
க.செல்வராசு.
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳