மரங்களின் குரல்

ஏ...மனித குலமே
எங்கள் சருகுகளும்
சங்கீதம் பாடும்

எங்கள் கிளைகலெனும்
விரல்கள் சீதைகள்
காய்ந்தபின் தீய்க்குளிக்கும்
உணவு சமைக்கும்
ஏழைகளுக்காய்

உங்ககளைப் போல
ஜாதி உண்டு எங்களுக்கும்
ஆனால் நாங்கள்
பாகுபாடு பார்ப்பதில்லை...

நீங்கள் வீட்டுக்கு வரும்
சொந்த பந்தங்களையே
யார் என்று கேட்கிறீர்கள்
நாங்கள் கேட்டதுண்டா
எங்கள் நிழலுக்குள்
வருபவர்களை
நீங்கள் யாரென்று...

ஆறாம் அறிவு இருந்தும்
பிரிவுகள் ஆயிரம் உங்களிடம்
புரிதல் இல்லாததால்...
ஆனாலும் நடிக்கிறீர்கள்
நடக்க முடியும் என்பதால்
ஒன்றாக இருப்பது போல்...

பிரிவுகள் ஆயிரம் எங்களிடமும்
ஆனாலும் புரிதல் உண்டு
இருக்கும் இடத்திலிருந்தே
நகராமல், காரணம்
உங்களை போல
நடக்கவும் முடியாது
நடிக்கவும் முடியாது...

எங்களை அழித்துவிட்டு
சுவாசத்தை கைது செய்தால்
உங்களின் சுவாசம்
உங்கலிடமிருந்து
விடுதலை பெற்றுவிடும்...

ஆனாலும்
நாங்கள் அழிவதில்லை
மரக்கிளையில் வாழும்
பறவைகள் தங்கள்
எச்சத்தால் மீண்டும்
எங்களுக்கு எங்காவது
உயிர் கொடுக்கும்
உங்களை விட பறவைகள்
நன்றியுள்ளவை...

நாங்கள் கட்டைகள்தான்
நீங்களோ குட்டைகள்
எண்ணங்களிலும்
உயரத்திலும்
ஆனால்
இந்த இரண்டிலுமே
உங்களைவிட
நாங்கள் நெட்டைகள்
ஆகவேதான்
நீங்கள் கட்டையாகும்
போதுகூட
நாங்கள் உடன்கட்டை
ஏறுகிறோம்...

ஏ...மனித குலமே
சுயநலத்திற்கு
விடுதலை கொடு
வருங்காலத்திற்கு
நல்ல சுவாசம் கொடு...

எழுதியவர் : மேஜர் முருகன் (5-Jun-21, 10:02 am)
சேர்த்தது : Major Murugan
Tanglish : marankalin kural
பார்வை : 132

மேலே