பௌர்ணமியில் அவளுடன்
அன்று பௌர்ணமி இரவு
கடற்கரையோரம்
மெல்லிருட்டு
நிலவொளி மட்டுமே துணையாக
நானும் அவளும் மட்டும் தனித்திருந்தோம்
அவள் என் மடியில்
ஒரு பூரண நிலவு வானிலும்
இன்னொரு பூரண நிலவு என் மடியிலும்
நிலவை விட ஒரு படி பிரகாசம் அதிகமாவே
அவளது சுந்தர முகத்தில்
ஆழி கொண்ட சத்தம் அது எங்கள் மௌனத்தை தொல்லை செய்தாலும்
கண்களாலேயே பேசிக்கொண்டோம் இரவு முழுதும்
அவள் கடற்கரை மணலை அள்ளி அள்ளி கீழே போட
நான் அவள் கூந்தலை அள்ளி அள்ளி கீழே போடுகிறேன்
அவள் முகத்தை அவள் கூந்தல் அது மறைக்க
அதை சரி செய்கிறேன்
என் காதல் அதை அவளிடம்
வித விதமாக சொல்லுகிறேன்
அவளின் கன்னத்தில் முத்தமிட
சூசகமாய் உத்தரவு கேட்கிறேன்
அவள் வெட்கத்தில் மௌனிக்க
மௌனம் சம்மதமென தயக்கமாய்
முத்தமிடுகிறேன்
மடியில் இருந்தவள்
என்ன கரம் பற்றி
என் தோல் சாய்கிறாள்
அவள் ஆசை அவை ஒவ்வொன்றாய் சொல்கிறாள்
சிறுது நேரம் ஊர் பேச்சு
சிறுது நேரம் காதல் பேச்சு
என அவ்விரவு நீளுகிறது
நான் வைத்திருந்த கவிதைகள் ஒவ்வொன்றாய்
அவளிடம் அவிழ்த்து விடுகிறேன்
என் ஆசைகள் கவலைகள்
வெஞ்சம் தீர அவளிடம் கொட்டுகிறேன்
பேச பேச காதல் கூட கூட
நெஞ்சம் கணக்கிறது
வார்த்தையின்றி கண்ணீருடன்
என் காதல் காமிக்கிறேன் அவளிடம்
அவள் சூடான கைகளால்
என் ஈர விழிகளை துடைக்கிறாள்
என் நெஞ்சமது அக்கணமே உடைகிறது
அவளை மார்போடு அனைத்து கொள்கிறேன்
நெற்றியதில் முத்தமிடுகிறேன்
அக்கணமே நான் மடிந்தாலும்
போதும் என்ற எண்ணம் ஒரு பக்கம்
அவளோடு நூறு வருடம் வாழ வேண்டுமென்ற ஏக்கம் ஒரு பக்கம்
அவ்விரவு இப்படியே இருந்து விடாதா என்ற தவிப்பு ஒரு பக்கம்
அவள் என் மனைவியாக என் பக்கம் இருக்கிறாள் என்ற உவகை ஒரு பக்கம்
என
ஒவ்வொரு உணர்வாய் என் இதயமதை நாளா பக்கமும்
உளுக்கி எடுக்கிறது
இரவு முழுதும் நானும் அவளுமாக காதல் மொழி பேசிக்கொண்டோம்
புறப்படும் நேரம் நான் மெல்ல எழும்புகிறேன்
என் கை கொடுத்து அவளை
எழுப்புகிறேன்
கொடுத்த கை பிடியை தளர்த்தாது
கை கோர்த்த படியே நடக்கிறோம்
என் வாழ்நாள் முழுக்க இப்படியே
நடந்து விட முடியாதா என்ற ஏக்கத்துடன்
அடுத்த பௌர்ணமி இரவை எதிர் பார்த்து
அவளுட னான என் நடை பவனியை
தொடர்கிறேன் வீடு செல்ல.........