ஒயில் நடையாள்

கலி விருத்தம்

குடைபிடி மகளுடை ஒயிலது களித்திட
கடைத்தெரு விலையினி வரிசையை விடலையு
உடைகளு டனழகு பொருளது பிடிபட
கடைபல உறவுட னலைவது வளைவே


வளைதல் .... வாங்குதல்
வரிசையை ... தரம் மற்றும் மேம்பாடு
விடலை. ... இளைஞ்சர்

வெயிலினைப் பார்க்காது விடலைப் பெண்டிர் குடைபிடித்து
உடைகள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் கடைகளில்
தரமும் விலையும் விசாரித்து வாங்க உறவுகளுடன் வருவர்
அந்த ஒயிலழகை கண்டு களிக்க பலர் வலம் வருவர்.


......

எழுதியவர் : பழனி ராஜன் (6-Jun-21, 7:15 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 60

மேலே