மாலை தென்றல் வீசும் பொழுதில்

கலைமான்தனின் மருளலுமிலை
செந்தேன்தனின் தெவிட்டலுமிலை
பூவினம்நிகர் புன்னகையினள்
வான்நிலாவினின் வெண்ணழகினள்
பெண்ணழகினில் பூமிமீதினில்
வந்தாயோ
மாலை தென்றல் வீசும் பொழுதில்
என்னைத் தேடியே சோலை வருபவளே

கவிக்குறிப்பு :
----குறளடிகளாலும் கனிச்சீர் மிகுந்து வஞ்சித் தளைகள் பெற்று
வஞ்சி குறளடிக்குப்பின் தனிச்ச்சொல்( வந்தாயோ) பெற்று
பின் இரு சுரித அடிகளுடன் ஆசிரிய ஓசை பெற்று
வந்த குறளடி வஞ்சிப்பா ---விளக்கம் இலக்கண ஆர்வலருக்காக மட்டும்
மற்றவர்கள் புதுக்கவிதையென ரசிக்கவும்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jun-21, 11:36 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 50

மேலே