நானும் என் எழுதுகோலும்
ஒரு முறை என் எழுதுகோல் (பேனா) என்னிடம் கேட்டது
உன் சந்தோஷத்திலும் ,வருத்ததிலும் என்னிடம் வருகிறாயே என் மீது அவ்வளவு அன்பா? என்னை உனக்கு அவ்வளவு பிடிக்குமா என்று?
பாவம் அதற்கு நான் எப்படி புரியவைப்பேன் இப்போது வரை என் தேவைக்காக பயன்படுத்தி கொண்டதை அன்பு என்று நினைத்து கொண்டது என்று.
அந்த நொடியில் உணர்ந்தேன் உன்மையில் என்னை அறியாமலே உன்னை நேசித்தேன் போல அதனால் தான் உன்னை தேடி வந்துள்ளேன் என்று.
இனி தேவைக்காக தேடாமல் அன்பால் தேடுவேன் உன்னை.