மூன்றெழுத்தில் முளைத்த பூ நட்பு

மூன்றெழுத்தில்
முளைத்த பூ நட்பு;
முக்கனியாய் தித்தித்தது நட்பு;
மலர்ந்தே நறுமணம் வீசும் பூ நட்பு;
நித்தம் பூக்கும் நட்பு;
நிறம் மாறாதப்புபூ நட்பு;
நிரந்தறமாய் மணக்கும் பூ நட்பு;
நித்திய ஜீவனே நட்பு;
உதிரம் சுமக்கும் பூ நட்பு;
உதிராத பூ நட்பு;
உயிரோட்டம் உள்ளப்பூ நட்பு;
உயிரையே கொடுக்கும் பூ;
உன்னதமானப்பூ;
பழுதாகாதது நட்பு;

பாலினம் தாண்டிய நட்பு;
பால்ய நட்பு
அது பள்ளியில் துவங்கிய நட்பு;
பயிழகத்தில் துவங்கிய நட்பு;
பாதியில் வந்த நட்பு;
பணியில் கிடைத்த நட்பு;
பழகிட வந்த நட்பு;
பக்கத்தில் இருந்து வந்த நட்பு.

பால்போன்ற தூய நட்பு;
பழகப் பழக தெவிட்டாத நட்பு;

அது
நட்பென்னும் அருமருந்து;
நட்சு கலக்காத அமுது.

நம்பிக்கை ஊட்டுவது நட்பு;
நம்பி கரம் கொடுத்த நட்பு;
நீங்காத நட்பு;
நீண்ட நாள் நட்பு;
நிஜமான நிழலது நட்பு;
மூச்சாய் சுற்றிவருவது நட்பு;
முடிவு இல்லாதது நட்பு;
தோற்றாலும் தேற்றி
தெம்பாக தோள் கொடுக்கும் நட்பு.

ஆழமான நட்பு;
ஆபத்தில்லாத நட்பு;
காலம் கடந்தாலும்,
காத தூரம் சென்றாலும்,
காத்துக்கிடப்பது நட்பு.
ஊத்தாய் உருவாகி,
ஓடும் நதியாய் ஓடி,
ஒன்றாய் சேர்ந்த சங்கமமாய்,
கடலாய் விரிந்தது
எந்த கார்ப்புணர்வு இல்லா
உயிர்பெற்ற இந்த நட்பு

நட்பில் இல்லை என்றும்
வியப்பு;
நட்பு எடுப்பதில்லை கசப்பு;
நட்பறியாதது பசப்பு;

தாய்மை மிஞ்சிய நட்பு;
தவறாய் போகாத நட்பு;
தள்ளிப்போகாத நட்பு;

தட்டி கேட்கும் நட்பு;
தடுமாறாத நட்பு;
தடம் புறலாத நட்பு;
தன்நலம் இல்லாத நட்பு.

வேறுன்றிய நட்பு;
பேறுபாடு தெரியாத நப்பு.
மதம் இனம் தெரியாதது நட்பு;
மறக்க முடியாதது நட்பு;
மறுபடியும் மறுபடியும் பிறந்து கொண்டே இருப்பது நட்பு.

பொழியும் இந்த நட்பு,
மொழிக்கு அப்பாற்பட்ட நட்பு,
பொய்யுரைக்கத் தெரியாத நட்பு

சுயம்பாய் வந்தநட்பு;
சுயநலம் இல்லா நட்பு;
சுத்தமான நட்பு;
சுக துக்கத்தை பங்கு கொண்ட நட்பு.

நட்புக்கு இல்லை எல்லை;
நட்பில் இல்லை தொல்லை;
நட்பால் இல்லை கவலை;
நட்பு இருந்தால் எதிரி இல்லை;
எதிர்ப்பவர் யாரும் இல்லை;

எதையும் எதிர்பார்க்காது
வருவது நட்பு;
ஏமாற்றத்தெரியாதது நட்பு;

ஒன்றாய் கழித்த நட்பு;
ஒன்றையும் கேட்காதது நட்பு;
மதம் இனம் தெரியாதது நட்பு;
நட்பு தேசத்தில்;
நடைபழகிய நட்பு;

அடை மழையாய்
பொழிந்த நட்பு;
அகத்தில் மலர்ந்த நட்பு;
அல்லல் துடைத்த நட்பு;
அவதூறு இல்லா நட்பு;
அப்பழுக்கு இல்லா,
அன்பால் மலர்ந்த நட்பு,
அரிய பொக்கிஷமே நட்பு,
அவதாரம் எடுத்துவந்த நட்பு;
அரிதாரம் பூசாத நட்பு;
ஆதாரேமே நட்பு;
அழியாத நட்பு;
அன்பின் பிரளயமே நட்பு;
அந்த நட்பில் என்றும் உண்டு நன்றி என்ற உட்பு

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (10-Jun-21, 3:48 pm)
பார்வை : 395

மேலே