நட்பு

எங்கிருந்தோ வந்தாய்
என்னருகில் அமர்ந்தாய்
எதேச்சையாக பேசினோம்
சிரித்து மகிழ்ந்தோம்
உணவினை பகிர்ந்து ருசித்தோம்
நான் அழுகையில் ஆற்றி தேற்றினாய்
என் வலியை உன்வலியாய் உணர்ந்தாய்
என்னை விட்டு கொடுக்காமல்
என்னோடு துணைநின்றாய்
என் துன்பத்தில் தோள் கொடுக்கும்
தோழியும் நீயே!
தவறுகளை சுட்டிக் காட்டும்
சிநேகிதியும் நீயே!
நட்புக்கு இலக்கணமானவளும் நீயே!
என் பிரிய சிநேகிதியே!

எழுதியவர் : ஜோதிமோகன் (10-Jun-21, 9:36 am)
சேர்த்தது : ஜோதிமோகன்
Tanglish : natpu
பார்வை : 232

மேலே