பூமிக்கு பிறந்தநாளாம்

உண்டியும் உடையும் பெருகலாச்சே
உத்தமர் நிலையும் குறையலாச்சே
கண்ணியம் என்பது இற்றுப்போச்சு
கற்பென்ற நிலையும் கேலியாச்சே
திரைப்பட நிலையே வாழ்க்கையாச்சே
அன்பினால் பாசம் அரியதாச்சே
அதிகமாய் புசிப்பது பெருலாச்சே
அதற்கேற்ற பணிகள் குறையலாச்சே
உழைப்போரின் உள்ளங்கள் கள்ளமாச்சே
உற்பத்திக்கும் பொருள்கள் கலப்படமாச்சே
எல்லாவற்றுக்கும் பணமே முதன்மையாச்சே
எண்ணிக்கையில்லா தவறுக்கு காரணமாச்சே
இயற்கையின் விலகல் அதிகமாச்சே
இம்சைக்கும் வியாதிகள் பெருக்கலாச்சே
நளினமிகு நடிப்புகள் கூடுதலாச்சே
நம்பிக்கை துரோகங்கள் அதிகமாச்சே
பகுத்தறிவு நிலையதுவும் பெருகியதாலே
பல்லுயிர் பூமியது சிதையலாச்சே
ஆறறிவு மிருகத்தின் ஆடம்பரத்தால்
அற்புத நிலவுயிர்கள் அழியலாச்சே
கீழ்ப்பிறவி மனிதனின் கெட்டறிவு
மேனிலை எந்நாளில் அடைகின்றதோ
அந்நாளே பூமிக்கு பிறந்தநாளாம்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (11-Jun-21, 9:45 am)
பார்வை : 106

மேலே