அன்றும் இன்றும்

" *அன்றும் ... இன்றும் "*

சுக்குடன் இஞ்சி யென்றும்
...சொட்டெனத் தேனும் பாலும்
முக்கிலே யானைப் பல்லும்
... முற்றமோ துளசி நார்த்தை
சொக்கிடும் மிளகோ மஞ்சள்
... சுட்டிடும் சோறுங் கூட
சிக்கிடும் சீக்கை நீக்கச்
... சிறந்ததாய் மருந்தா மன்று.

இன்றது நிலையோ மாறி
... இருமினால் தொற்றென் றாகி
சென்றிடும் திசைக ளெல்லாம்
... சேருமோ நோயென் றோடி
கொன்றிடும் நிலையென் றெண்ணி
...கொட்டுவர் பணமாய்க் கொண்டு
பொன்னையும் விற்றுத் தீர்த்தே
புலம்புவர் மருந்தால் தீர.


( *அறுசீர்க் கழிநெடில்* *ஆசிரிய விருத்தம்)*

(விளம் மா தேமா
... விளம் மா தேமா)

(முக்கு - மூலை,

சுட்ட சோறு - காயத்திற்கு ஒத்தடம் தர பயன்படுத்தப்படும்)


மரு.ப.ஆதம் சேக் அலி

எழுதியவர் : PASALI (11-Jun-21, 5:58 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 153

மேலே