அலட்சியம் வேண்டாம்

" *அலட்சியம் வேண்டாம்* "

பற்களைப் பிடுங்கிப் பாம்பை
...பக்குவப் படுத்தி னாலும்
கற்களை வீசச் சீறும்
...கண்டதும் சீறிப் பாயும்
அற்புத ஊசி என்றே
...அத்தனை பேரும் போட்டும்
சொற்பமோ மீண்டும் தொற்றால்
...சூழ்வதோ உன்னால் தானே.


( *அறுசீர்க் கழிநெடில்* *ஆசிரிய விருத்தம்)*

(விளம் மா தேமா
...விளம் மா தேமா)

(கொரோனா தடுப்பு ஊசியைத் தான் போட்டுவிட்டோமே என்று...தைரியமாக...முன் எச்சரிக்கைகளை விடுத்து நடந்தால் ...மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.... அது பல் பிடுங்கிய பாம்பைச் சீண்டுவது போலாகும் ...அது வாலாலும் தாக்கும்.)

மரு.ப.ஆதம் சேக் அலி.

எழுதியவர் : PASALI (10-Jun-21, 8:22 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 47

மேலே