கவலையை விடு

" *கவலையை விடு"*

தொற்றிலே மீண்டோ ரின்று
... துயரெனக் கொள்வ ரொன்றில்
சற்றுமே பாரா நேரம்
... சர்க்கரை அளவுங் கூட
புற்றென செந்நீ ரேறி
... புகுந்திடும் உடலுள் ஓடி
குற்றமோ உன்னா லில்லை
... குறைந்திடும் தன்னால் நாளை.

( *அறுசீர்க் கழிநெடில்* *ஆசிரிய விருத்தம்* )

(கொரோனாவிற்காகத் தரப்படும் மருந்துகளில் சில... உடல் சர்க்கரையின் அளவைக் கூட்டிவிடும். எனவே சர்க்கரை நோய் வந்துவிட்டதாகப் பலர் கவலை கொள்வர். கொரோனா சரியானதும்.... சர்க்கரை அளவும் தானாகவே குறைந்து விடும் )

மரு.ப. ஆதம் சேக் அலி

எழுதியவர் : PASALI (9-Jun-21, 5:56 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 102

மேலே