ஆசை ஆசை பகுதி- 2

ஆசை ஆசை

பரித்த திருட்டு மாங்காவை
பங்கு போட்டு சாப்பிட ஆசை
பல்லி மிட்டாய் வாங்கித்தின்ன ஆசை.
பம்பரம் சுற்றி விளையாட ஆசை.

கிறுக்கிய பேப்பரை
கிழித்தே கவிதை வடித்திட ஆசை

கால் நடையாய்
இருட்டில் நடந்திட ஆசை

விரட்டிய நாயை வீம்பாய்
அடித்திட ஆசை
விடியும் வரை மரக்கிளையில்
உறங்கியே கிடக்க ஆசை

முரட்டுக்காளையை முட்டிட ஆசை
முயலுடன் கூடியே ஓடிட ஆசை
முட்டாளுடன் முழுநாள் பொழுதை கழித்திட ஆசை

குறட்டை விடுபவன் மூக்கில்
குச்சை விட்டு கடைந்திட ஆசை

வெட்டவெயில்
வெறும் சட்டையுடன் வீற்று இருக்க ஆசை.

கட்டு மரத்தை கட்டி இழுக்க ஆசை
குட்டி குரங்காய் மாறி
சேட்டைகள் செய்திட ஆசை

எரிமலைக்குள் புகுந்து
எரியும் நெருப்பை எடுத்திட ஆசை
ஏரிக்கரையில் அமர்ந்து
எட்டிய வரை
கல்லை விட்டே வீசி விளையாட ஆசை.

மின்னலைப் பிடித்து
விண்ணில் தாவ ஆசை

மிதியடியில்லாமல் மீண்டும் நடந்திட ஆசை
வண்டியை இழுத்தே ஓட்டிட ஆசை
மிட்டாய் தின்று பல்வலியில்
துடித்திட ஆசை.

ஆந்தையின் கண்ணில் ரௌத்திரம் பழக ஆசை
அயர மீனாய் துடித்திட ஆசை
நண்டுடன் ஓடி விளையாட ஆசை
நாட்டுப்புற கலைகளை கற்று நடனம் ஆடிடஆசை.

நத்தையின் முதுகில்
அமர்ந்து நகர்ந்து போகிட ஆசை
நந்தவனத்துப் பறவையாய்
திரிந்திட ஆசை

ஒரு சிலேட்டுக் குச்சிக்காக
ஓராயிரம் முறை சண்டைபோட ஆசை.
ஓட்டை டவுசரை மறைக்க
சட்டையே இழுத்து இழுத்து
நடந்திட ஆசை

உப்பு மூட்டை சுமந்து
ஊர் சுற்றிவர ஆசை
பட்டி தொட்டியெல்லாம் பார்த்திட ஆசை.

கிட்டிப்புள்; விளையாட ஆசை
பச்சைக் குதிரை பாய்ந்தே ஆடிட ஆசை.
பாவையர் குளியலை பார்த்திட ஆசை.

பாவாடைத் தாவனியிகுள்
காற்றாய் புகுந்திட
ஆசை.
குளக்கரைக் குளியலில்
கும்மாலம் போட ஆசை
நெருப்பாய் பெண்கள் பாய்ந்திட
ஓடியே ஒளிந்திட ஆசை
ஒன்றாய் கூடி
ஊர் சோறு சாப்பிட ஆசை.

பொய் விளையாட்டில் போக்கு காட்டிய தோழியை
போடி என்றே கிள்ளியே
கள்ளாட்டை என்று கூறிட ஆசை.

தோழியின் குழந்தையை
தோல்களில் தூக்கியே சுற்றிவர ஆசை

விரும்பியதை வாங்கித் தந்திட ஆசை.
வந்த கட்டுக்கதையைக் கூறி
சிறுவர்களை வாயைப்பொத்தியே வைத்திட ஆசை

விடியும் வரை தெருவிளக்கில் படித்திட ஆசை
கல்லூரி வாழ்க்கையை மீண்டும் கண்டிட ஆசை
கால்சட்டைக் கனவை மீண்டும் கண்டிட ஆசை
கண்ணுக்குள் ஓடிய கவலையை கண்டிட ஆசை
வறுமைக்குள் திரியும் வயிற்றுப் பசியைப் பார்த்திட ஆசை.
வைக்கோல் பிடியை கொளுத்த்p
வதைத்த குளிரை விரட்டிட ஆசை
வடிச்ச கஞ்சை குடித்திட ஆசை
மண்ணென்யை வாங்க மீண்டும் ரேசன் கடையில் வரிசையில் நிற்க ஆசை
விறகை வாங்கி சுமந்து வரஆசை

பண்டிகை நாளில் படுத்து உறங்க ஆசை
வானொலியில் ஒளிச்சித்திரம் கேட்டிட ஆசை
நாடகவிழாவை நாளும் போட்டுக் கேட்டிட ஆசை
பேப்பரில் பட்டம் செய்து
விட்டு விளையாட ஆசை.

பேய்க்கு பயந்து இருட்டில்
ஓடியே வந்திட ஆசை

மண்டி போட்ட நாட்களை நினைத்திட ஆசை
டீச்சரின் பிடியில் பிரம்படி வாங்க ஆசை.

மணப்பாடம் வராமல் மீண்டும்
வாய்ப்பாட்டை பலமுறை
வாய்விட்டே வாசிக்க ஆசை.

மீசை வாத்தியார் மிரட்டியே
எழுதிய கணிதத்தை எடுத்து படித்திட ஆசை
எட்டாத அல்ஜிப்ரா ஜாமன்ரியை மீண்டும்
போட்டுப் பார்த்திட ஆசை

வரைபலகையில் வண்ண வண்ணமாய் படங்கைளை வரைந்தே
வம்பு வளர்க்க ஆசை

வருகின்ற வாத்தியாரின் முன்னாடி நின்று
அயிரம் முறை பிடித்தே கால்சட்டையுடன் வணக்கம் சார் சார் என்றே கூவிட ஆசை.

பள்ளிக் கூடத்தில் மணி அடித்த உடனே.
ஓ ஓ என்றே கோரசுடன்
ஓடிவர ஆசை.

திருட்டுத்தனமாய்
கோழிமுட்டையை குடித்திட ஆசை.
கோவணக் குளியல் போட மீண்டும் ஆசை.

கொட்டும் மழையில்
கொடையில்லாமல்
புத்தக மூட்டையை தலையில் சுமந்தே
ஓடிவர ஆசை.

கோவில் புறாவாய் சுற்றித் திரிந்திட ஆசை.

ஓட்டுக் குடிசையில் ஒழுகும் மழைநீரை சட்டியில் பிடித்து வைக்க ஆசை.
சட்டை நனைய
சுட்டித்தனமாய் விளையாட ஆசை.

ஓட்டை வீட்டில் எலியின் வேட்டையைப் பார்த்து ரசித்திட ஆசை.

படை நடுங்க வைக்கும் பாம்பை கையில் பிடித்திட ஆசை
பசுவின் மடியில் பால் குடித்திட ஆசை.

அரும்பும் மீசையுடன்
அன்புத் தோழியுடன்
ஆசையாய் பேசி விளையாட ஆசை

குறும்புப்பார்வையில் புகுந்து
குதுகளிக்க ஆசை

ஓடும் கரும்பு வண்டியில் கரும்பைத்திருடி
கடித்தே திண்றிட ஆசை
கோடை வெயிலிலும் கொடைபிடிக்க ஆசை
கோடை வெயிலில்
வெறும் காலுடன் துடிக்கத் துடிக்க ஓடிட ஆசை

தாகம் தவிக்க
தண்ணீரை அப்படியே
மட மட என்றே
மடி நணையும் வரை
குடித்திட ஆசை.

மாராப்பு ரகசியத்தை
மறைந்தே பார்த்திட ஆசை

கண்களைக் கட்டியே விளையாட ஆசை
கல்லுக்குள் விழுந்து
காலை உடைத்திட ஆசை.

கால் சட்டையுடன்
கட கட வென்றே ஓடி
தோழியின் சடையை இழுத்து வம்பு செய்திட ஆசை
அவள் பாவடையை பிடித்தே இழுத்து
பொல பொல வென்றெ அடி வாங்க ஆசை
நாயே சனியனே என்று திட்டிய வசையை திரும்பவும் கேட்டிட ஆசை.

ஐயாவின் மனதில் இடம் பிடிக்க ஆசை
அம்மாவின் கோபத்தில் அடி வாங்க ஆசை
தங்கையை துரத்தியே
அடித்து விளையாட ஆசை
தம்பி தங்கையர்கள் தோழிகளுடன் கூடியே
உறங்கிட ஆசை.

பூவையர்கள் விழியல் புகுந்திட ஆசை
புதிது புதிதாய் கற்பனைகள் செய்து
கனவில் மிதந்திட ஆசை.

பார்த்திட்ட அவளிடன்
பல்லைக்காட்டியே வழிந்திட ஆசை

ர்pப்பன் நுனியை பிடித்தே தோழியின் சடையை இழுத்திட ஆசை

கொடை சாய்ந்த வண்டியில்
குட்டிக்கரணம் அடிக்க ஆசை.

கட்ட வண்டியின் பின்னாள் தொங்கியே விளையாடி நடந்து வந்திட ஆசை.

வயக்காட்டில் நாற்றை மிதித்தே ஓடிட ஆசை.
சேற்றில் மீன் பிடித்து விட்டு விட ஆசை.

வம்பாய் சேற்றில் விழுந்து
சட்டையை சகதியாக்கிட ஆசை.

ஓணாயின் வாயில் புகையிலை வைத்தே
பேயாட்டம் ஆட வைக்க ஆசை.
ஆசை ஆசை

பகுதி- 2

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (11-Jun-21, 8:48 pm)
பார்வை : 34

மேலே