எரியும் இராத் திரிகள்

உனக்குள்ளிருந்து
ஆயிரம் உதடுகள்
என்னுடல் இருக்கும்
முத்தங்களை
மூர்க்கமாக
விழுங்கிகொண்டிருக்கின்றன

துடித்து துடித்து
என்னை இருப்பில்
வைக்கும்
உயிர்ப்பீடமான
இதய சப்தங்கள்

இடைவிடாத
உச்சரிப்பில்

இமைகளற்ற
உன் பெயரை
இரவெங்கும்
மொழிந்து
கொண்டிருக்கின்றன

எழுதியவர் : S. Ra (11-Jun-21, 9:07 pm)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 104

மேலே