அழகுக்குள் அழகு

அழகுக்குள் அழகு
அதுவடித்த அழகே அழகு

இயற்கை வடித்த அழகே அழகு
இசை வடித்த சுரம் அழகு
இவள்பிடித்த கரம் அழகு
இவள் வடித்த அழகும் அழகு
இரவு வடித்த இருட்டழகு
இடித்து கொட்டிய மழை அழகு
மின்னலைப் பின்னிய கருமேகம் அழகு
மலையின் உச்சி அழகு
மடையில் ஓடும் நீர் அழகு
மழலையின் குரல் கூச்சலும் அழகு

மகளீர் எடுத்த உச்சும் அழகு
மழைக்க வைத்த குன்றும் அழகு
மழைக்கு ஒதுங்கி ஆட்டு மந்தையும் அழகு
அம்மே என்றே கூப்பிடம் ஆட்டக்குட்டியின்
துள்ளல் அழகு
பசுவின் தாய்பாசம் அழகு
பசுமையும் அழகு
பசிக்கு ம்மே அ அ என்றே கட்டைக்குரலில்
கத்தும் எருமையின் இசையும் அழகு
அதன் மேல் ஒட்டிய அழுக்கும் அழகு

ஒட்டிய வயிரழகு
ஓடும் குதிரையின் கால் குழப்படி சப்தம் அழகு
கழுதையின் கனைப்பழகு
கட்டியணைத்துத் தாவும்
தாய்க்குரங்கின் பாசம் அழகு
கழுத்தை நீட்டி சிறகை விரித்தாடிய
மயிலின் ஆட்டமும் அழகு
காக்கையின் கருப்பழகு
கரைந்தே கூப்பிட்ட குடும்பத்தினரின்
உறவுக் கூட்டம் அழகு
கருவண்டின் ரீங்காரம் அழகு
கருவுற்ற மேகம் அழகு

முட்டியே முட்டையை உடைத்து
முன்வந்து முகம் காட்டிய குஞ்சழகு

கொண்டையைக்காட்டி
தொண்டையைத் தூக்கி
கண்டிடக் கூவிய சேவல் அழகு

வெட்டாத அருவாளை
விதவிதமான வண்ணத்தில் வைத்து
வெடைத்துக் கொண்டே
கொக் கொக் கென்று கோதியே
பெட்டையை அண்டிய சேவல் அழகு
சத்தமே இல்லாமல்
கோடியில் கொஞ்சும் சேவலின் பாசை அழகு.

வீம்பாய் வந்து விழித்து நிற்கும்
பெட்டையும் அழகு

ஆந்தையின் கண்ணழகு
ஆட்டின் வால் ஆடுவது அழகு

கோபத்தில் குலைத்து
வெறுதாய் ஓடி
பயத்தில் பதுங்கி
வாலை வளைத்து காழுக்குள் தினிக்கும்
பயந்த நாயின் பாவனை அழகு

குலைத்தே கும்மாளம் இட்டு கூட்டாமாய்
கச்சேரி நடத்தும் நாய்கள் கூட்டம் அழகு.

எட்டியே பார்க்காமல்
எடுத்ததை இழுத்துச் செல்லும்
எறும்புக் கூட்டதின் ஓட்டம் அழகு.

ஒட்டியே நின்று ஓராயிரம்
கதைபேசிய மாம்பழக்கொத்து மரத்தில்
தொங்குவது அழகு
ஆட்டியே எழுந்த ஆலையமணியின்
ஓசை அழகு

கூட்டியே வந்து குஞ்சுக்கு
வாயில் ஊட்டும் தாயின் பாசம் அழகு

கொதிக்கும் நீரில் கொப்பளிக்கும் காற்று அழகு

ஏட்டில் அழகு
இவள் எடுத்து வைத்த
எட்டும் அழகு
பருவம் பூத்து பதித்திட்ட 16ரும் அழகு
அரும்பிய ஆசையில் மலர்ந்த முகம் அழகு

படையைக் கவிழ்திட்ட 20வதில்
கடைகோடி விழியிலும் அழகு
தொட்டு விட்ட இருபத்து ஐந்தும் அழகு
கொட்டிய கொல்லைபோகும் அழகே அழகு
மொட்டிட்ட முல்லை அழகு
மொட்டாய் பூத்த பருவம் அழகு
முத்திட்ட காயும் அழகு
முதிர்ந்த பழம் அழகு
மொய்திட்ட ஈக்களின் கூட்டம் அழகு

30பதில் முழு அழகு
முழங்கை புகாத ரவுக்கை அழகு
மூப்பில் முதுகு கூனும் அழகு

கட்டியசோறு அழகு
கடித்திட்ட நாவழகு
மீட்டிட்ட இசையழகு
மின்னிய மேகம் அழகு

நாட்டியமாடிய இடையழகு
நடுவில் விட்ட குரட்டையழகு

கொடுத்திட்ட முத்தம் அழகு
கொடுத்துச்சிவந்த கன்னம் அழகு
விடுபட்ட கையழகு
விடைதெரியாது தவித்த தவிப்பழகு

கைக்குட்டை கசங்கியது அழகு
கைபட்ட கரம் அழகு

குதித்திட்ட குடம் அழகு
குடைந்திட்ட கரு வண்டழகு
தழவிய சிரம் அழகு
தவித்திட்ட இடம் அழகு
உதித்திட்ட உயிர் அழகு
ஊமையான மௌன மொழி அழகு.

பின்னல் இட்ட முடியழகு
முன்னால் வடித்த ஓவியமும் அழகு
தவுலின் அடி அழகு
தடித்த உடம்பழகு
தடுமாறும் நடை அழகு

குப்பைமேடழகு
கிளரும் கோழியின் கால்கள் அழகு
வந்திட்ட வாடை அழகு
வடையில் வந்த நூல் அழகு
வருத்திய தயக்கம் அழகு
வறுமையின் தாக்கமும் அழகு
கொட்டிக்கிடக்கும் அழகின் அழகே அழகு

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (11-Jun-21, 11:15 pm)
பார்வை : 1104

மேலே