சிந்துச்சமவெளி ஆனது என்நெஞ்சம்

சிந்துச் சமவெளி ஆனது என்நெஞ்சம்
சிந்து நதியலை போலுன் விழியலையில்
அந்தி இளந்தென்றல் மெல்லவந்து காதலின்
மந்திரம் சொல்லுதுகா தில் !

---இன்னிசை வெண்பா

சிந்துச் சமவெளி ஆனதுநெஞ்சம்
சிந்து நதியலைபோல் விழியலையில்
அந்தித் தென்றல் காதலின்
மந்திரம் சொல்லுது காதினில் !

----வஞ்சி விருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jun-21, 11:16 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே