தான் தான்
பாகம் 1
தான்! தான்! தான்!
தான் என்ற அகம்பாவம் வேண்டாம்தான்!
ஆம் அவன்தான்,
ஆறிவு படைத்த மனிதன் தான்;
அவன் வாழும் பூமியையே ,
அழிக்கத்துடிக்கும் மனிதன்தான்.
தான், தான் என்று
தலை தூக்கி தாண்டவம் ஆடவேண்டாம்;
நான் தான் என்று,
தடுமாற வேண்டாம் தான்.
தான் ,தான் என்று தாரத்தின் சொல்லைக் கேட்டு
தாயை உதாசீனப்படுத்துபவன்;
தரணியில் உதவாக்கரைதான்.
தமிழை மறந்து இருக்கவேண்டாம் தான்;
தன்னலம் தேடுபவன்,
தயவு காட்டமாட்டான் தான்.
தனிமையில் தான்;
துக்கமும் தயக்கமும் தான்,
தானாய் தலை தூக்கும் தான் .
அன்பு அம்மாய் பாயவேண்டும்தான்;
அன்னையின் பாசம் இலகும் தான்;
அடங்காத மனதில்;
ஆனவம் கிடந்து,
அடம் பிடிக்கும் தான்.
அடம் பிடிக்கும் மனதில் ,
அடக்கம் இடம்பிடிக்காதுதான்;
ஆசைக்கு முடிவில்லைதான்;
ஆசை அளவோடு இருக்க வேண்டும் தான்;
அதிகாரம் இருப்பவனிடம்,
அடக்குமுறை தங்கும் தான்.
அநியாயத்தில்,
நியாயம் காணமுடியாதுதான்;
அலைபாயும் மனதில்,
அசிங்கம் நிரம்பும் தான்.
அசிங்கத்திற்கு அவமானம் தெரியாதது தான்,
அதிஷ்டத்தைத்தேடுபவனிடம்,
அலட்சியம் தங்கும் தான்.
அலட்சியம் வந்தால்,
இலட்சியம் தங்காததுதான்.
ஆனவம் அடங்காததுதான்;
அகம்பாவம்,
அடம் பிடிக்கும் தான்.
இரக்கம் இல்லாதவன்;
அரக்கன்தான்.
இசைக்காத கீதத்தில்,
இனிமையலில்லை தான்,
இலகாதமனதில்,
இரக்கம் இல்லைதான்,
ஈர்க்காத விருபத்தில்,
உறவு இல்லைதான்.
உறங்கும் உறவில்,
உருக்கம் இல்லைதான்,
உதவாத மனிதனிடம் ,
(ஆ)ஊக்கம் இல்லைதான்,
எடுக்காத காரீயத்தில்,
வெற்றி இல்லை தான்,
எரியாத அடுப்பில்,
சமையல் இல்லைதான்,
எரியும் வயிற்றில்,
எழும்பிய புகச்சல்,
எரிக்காமல் விடாதது தான்.
ஏங்கும் இதயம் தாங்கும்தான்,
ஏழ்மையில் வறுமைதான்,
ஐயப்பட்டால் அழிவுதான்,
ஒதுங்கின நின்றாலும், பதுங்கிநின்றாலும்,
பயம் பயம் தான்.
ஒடுங்கியவனும்; ஒருநாள்,
உயர்வான் தான்.
ஓதியவன் ஒருபொழுதும்,
தீங்கு நினைக்க மாட்டான் தான்.
ஓயாது அடிக்கும் மனப்புயலில்,
காயாதது எதுவும் இல்லைதான்,
ஓயந்தபின் காய்ந்த சடலம் தான்,
கனிகொடுக்காத மரமும் மளடுதான்,
காசுபணம் இல்லாதவனிடம்,
விரோதி இல்லைதான்,
கசையடி படாமல்
கண்ணடிபடுவதும் ஒன்றுதான்.
புற்றீசல் பறப்பட்டபின்,
தங்காதது தான்.
புண்வந்த காலை குரங்கு நோண்டாமல்
விடாதது தான்.
நஞ்சை சுமப்பவனிடம்,
நயவஞ்சகம் தங்கும்
தான்.
நாசமாக்க நினைப்பவனிடம்
நலன் விசாரித்தால் நாசம்தான்.
மனம் போனோ போக்கில்,
வாழ வேண்டாம்தான்.
நிதானம் இல்லாத செயல்,
நிலையில்லாதது தான்.
மாற்றான் மனை நோக்குவனிடம் ,
மறந்தும் உறவு கொள்ள வேண்டாம் தான்.
மாற்றம் திருப்பத்தைத்தரும் தான்
வாழ்க்கை வாழத்தான்,
வழக்கு நிலுவையில் கிடக்கத்தான்
வம்பாய் வீண்பேச்சிக்கு,
ஆளாகக்கூடாது தான்
வாழ்க்கை வழக்காடு மன்றம்தான்
காதல் காத்திருந்தால் பூப்பதுதான்,
கருணை கண்ணீருக்குள் மறையும்தான்,
கடமை கண்போன்றதுதான்.
கனவு கண்டு உழைப்பவனுக்கு உயர்வுதான்,
கண்ணீர் சிந்துவதற்குத்தான்,
கனவு காண்பதற்குத்தான்,
கபட நாடகம் அரங்கேராததுதான்
கரிக்காத கடல் நீர்இல்லைதான்,
புளிக்காத மாவு புரோஜனம் இல்லைதான்,
பலிக்காத கனவில் பயன் ஒன்றும் இல்லை தான்,
தொடரும்

