மறையும் வரை மறவாது

வண்ணங்கள் மாறும்
எண்ணங்கள் மாறாது !
நிழற்படங்கள் மாறும்
நிஜங்கள் மாறாது !
உருவம் மாறும்
உள்ளம் மாறாது !
ஆக்கங்கள் மாறும்
நோக்கங்கள் மாறாது !
கவியாக்கம் மாறும்
கருத்தாழம் மாறாது !
சிந்தனை மாறும்
சிந்தை மாறாது !
கனவுகள் மாறும்
கடமைகள் மாறாது !
சமுதாயம் மாறும்
சமத்துவம் மாறாது !
அகவை மாறும்
அகமென்றும் மாறாது !
நிகழ்வுகள் மாறும்
நினைவுகள் மாறாது !
நட்புகள் மாறும்
நல்லுறவு மாறாது !
இருப்பிடம் மாறும்
இதயம் மாறாது !
படித்தவை மறக்கும்
படிப்பினை மறவாது !
உரைத்தவை மறந்திடும்
உண்மைகள் மறையாது !
மறையும் வரை மறவாது
மண்ணில் நாம் வாழ்ந்தது !
பழனி குமார்