அவள் அழகின் ரகசியம்

முழுநிலவென ஒளிரும் முக மழகு
அழகு தரும் அணிகலன்கள் ஏதும்
அணியாதிருந்தும் அள்ளி வீசும் அவள்
மேனி அழகு இதையெல்லாம் அறிந்த
அவள் காதலன் நான் சொல்வேன்
ஒப்பிலா அவள் அழகின் ரகசியம் .....
அதுதான் ஒளிவு மறைவிலா அவள்
வெள்ளை உள்ளம் அதில் சுனையாம்
பொங்கிவரும் அவள் அன்பு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Jun-21, 6:57 pm)
பார்வை : 181

மேலே