அப்பாவின் ஞாபகம்
" *அப்பாவின் ஞாபகம்"*
மலையாள
மந்திரவாதி ஒருவன் ...
மன்னர் வீட்டு
விருந்துக்கு ஆசைபட்டு ....
தன் மந்திரப் பொட்டால் ...
மாய உருவில்
மன்னனின்
சமையற்கட்டிற்கு
வந்தான்....
விருந்தில் படைக்கப்பட்ட
அத்தனையும் ருசித்த
அவனுக்கு ....
மிளகு ரசம்
குடிக்க ஆசை வந்தது...
மாய உருவில்
குடித்த அவனுக்கு ...
மிளகு ரசத்தின்
விளைவால் ...
வியர்த்ததாம்...
வியர்வையில்
அவன் இட்ட
மாயப்பொட்டு
நனைந்துவிட...
உருவம் தெரிந்ததாம்...
உருவத்தைக் கண்ட
காவலர்கள் ...
அவனைப் பிடித்து
சிறையிலடைத்தனராம்...
எவ்வளவு பெரிய
மாய, மந்திரமும்...விஷமும்
மிளகு ரசத்திற்கு முன்பு
பலிக்காது ....
எனச் சொல்லி
தினமும் மிளகு ரசம்
சாப்பிடுவது ...
என் அப்பாவின்
வழக்கம்...
கதைகள் பல
சொல்வதும் ...
அவரின் பழக்கம்....
ரசத்திற்காய்ச்
சொன்ன கதை...
ரசனை தந்தாலும்...
வாசனை தந்தாலும்...
இன்று அவர்
இல்லாதது ...
விஷம் தந்ததே....
மரு. ப. ஆதம் சேக் அலி
களக்காடு.