ரோஸ்
ரோஸ்
நிறமோ செம்மை
மனமோ வெண்மை
இரண்டு நாள் குட்டியாய் நீயும்
எங்களை வந்து சேர்ந்தாய்
புதிதாய் மலர்ந்த உனக்கு
ரோஸ் என்ற பெயரே பொருத்தம்...
வீட்டினில் நீயிருக்கும் போது
எவர் தான் நுழைய முடியும்?
எதைத் தான் தொட்டு விட இயலும்?
இரவுக் காவலன் நீயே
பகல் நேர பங்காளி நீயே
உன்னிடம் தப்பி யாரும்
ஓடவும் இயலவில்லை
கடைக்கண் பார்வை தாண்டி
ஒளியவும் முடியவில்லை
உனை விடுத்து நாங்கள்
நகரம் நகர்ந்த நேரம்
நீ மட்டும் அங்கு தனியாய்
அப்பத்தாவிற்கு துணையாய்
இருந்தாய்
விடுமுறைக்கு நான் வந்தபோது
விடை கொடுக்க மனமில்லை உனக்கு
உடன் வர நீயும் எண்ணி
சுற்றிச் சுற்றி வந்தாய்
எங்களை பிரிய மனமின்றி
தொத்தித் தாவிப் போனாய்
பனிரண்டு வருடம் நீயும்
பக்குவமாய் தானே வளர்ந்தாய்
சொல்லாமல் கொள்ளாமல் நீயும்
தொலைந்து போனதும் ஏனோ?
நீ மறைந்து போனபோதும்
உன் வாசம் இன்றும் இங்கும்
என்றும் எங்கள் மனதில்
உதிரா ரோஜா நீதான்...
-உமா சுரேஷ்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
