போதையை விடு
" *போதையை விடு"*
(மா கூவிளம் மா கூவிளம்
...மா கூவிளம் மா கூவிளம்)
மதுவோ போதையாம் !
மதியை மாய்க்குமாம் !
... மறந்தோ தொட்டிட
மனமோ மாளுமாம் !.
புதுசோ என்றுதான்
புரண்டாய் போதையில் !
... புரிந்த பின்னுமேன்
போனாய் பாடையில் !
எதுவும் ஏற்றிடும்
இதமா உன்னுடல் !
... இழந்தால் ஏற்றிட
இடமா உன்குடில்?
ததும்பும் கிண்ணமோ
தவறில் விட்டிடும் !
...தவிர்த்தால் வெற்றியோ
தானாய்க் கிட்டிடும்.
( *எண்சீர்க் கழிநெடில்* *ஆசிரிய விருத்தம்* )
மரு.ப. ஆதம் சேக் அலி.
...