தாலாட்டுப் பாடினாலும் தந்தையாகவில்லை

நான் படித்தேன் பாட்டு, அது தாலாட்டு
நான் இசைத்தேன் ராகம், அது ஸ்ரீராகம்

தாலாட்டுப் பாடினாலும் தந்தையாகவில்லை
ஸ்ரீராகம் இசைத்தாலும் நான் பாடகனில்லை

என் பாட்ட கேட்டு 100 குழந்தைகள் உறங்குது
பாடாம பேசினாலும் ஆவலாக கேட்குது!

நான் படித்தேன் பாட்டு, அது தாலாட்டு
நான் இசைத்தேன் ராகம், அது ஸ்ரீராகம்

திருமணம் செய்தேன், மணத்தை இழந்தேன், மறுமணம் இன்றி தந்தையாக இசைந்தேன்!
குழந்தைகள் கண்டேன், பெற்றோர் இல்லை
அனாதையாய் கைவிட எனக்கு மனம் இல்லை!

நான் படித்தேன் பாட்டு, அது தாலாட்டு
நான் இசைத்தேன் ராகம், அது ஸ்ரீராகம்

என் வீட்டை விற்றேன் பணமும் கொண்டேன்!
கதியற்ற சிறுவருக்கு இல்லம் அமைத்தேன்!
உணவும் உடையும் கொடுத்து வருகிறேன்!
அவர்க்கு கல்வியும் அளித்து வருகிறேன்!

நான் படித்தேன் பாட்டு, அது தாலாட்டு
நான் இசைத்தேன் ராகம், அது ஸ்ரீராகம்

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று உரைக்கிறோம்!
தெய்வங்களை அனாதையாய் வீதியில் காண்கிறோம்!
அரசாங்கமும் சமுதாயமும் கை கோர்த்தால்
கள்ளமில்லா சிறுவரும் வாழ்வார்கள்! கருணையாக சந்ததியினர் மலர்வார்கள்!

நான் படித்தேன் பாட்டு, அது தாலாட்டு
நான் இசைத்தேன் ராகம், அது ஸ்ரீராகம்

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (21-Jun-21, 4:52 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 34

மேலே