விழிப்புடன் நம் உடலை பராமரிப்போம் உலக யோகா தினம் சிறப்பு கவிதை
யோகா தினம் என்பது, வருடம் ஒரு முறை யோகத்தின் பயனை நினைவுறுத்துவது!
நாம் நல்ல உடல் மன ஆரோக்கியத்துடன் வாழ வருடம் முழுதும் செய்ய வேண்டியது!
நம் வாழ்விற்கு உடற்பயிற்சி எவ்வளவை இன்றியமையாதது என்பதை அறிவோம்!
நடப்பது ஓடுவது தவிர, மூச்சு பயிற்சி மற்றும் யோகாசனங்கள் சிலவும் கற்று, செய்வோம்!
அவரவர் உடல்நிலையைப் பொறுத்து தகுந்த யோக ஆசனங்களைச் செய்ய வேண்டும்!
முறையான மூச்சு பயிற்சி யோகாவின் மிக முக்கிய அம்சம்;தவறாமல் செய்ய வேண்டும்!
அதிகாலை எழுந்து யோகாசனம் செய்தால் கிடைக்கும் பலன்கள் மிகவும் அற்புதம்!
எனவே, அதிகாலை எழ, பழகிக்கொண்டு தியானம் உடற்பயிற்சிகள் செய்வது உசிதம்!
எதைச் செய்கிறோமா இல்லையோ, மூச்சு பயிற்சி செய்வதில் மட்டும் தவற வேண்டாம்!
நுரையீரல் சக்தி கூடுவதோடு , உள்ளிழுக்கும் ஆக்ஸிஜன் அளவும் கூடும்!
தியானமும் யோகாவின் ஒரு முக்கிய அம்சம் தியானம் தினம் செய்திடில் நலம் நம் வசம்!
சரியான முறை த்யானம் செய்திடில் கிடைக்குமே மகிழ்ச்சி, மனம் குடிக்கும் அமுத ரசம் !
சரியான உடற்பயிற்சியினால் வெளி வரும் வேர்வையில் கிருமி நாசினி வெளியேறும்!
வயிறும் வற்றி, சுத்தமாகி, வேளை வேளைக்கு பசி ஊறும், நாவினில் நல்ல ருசியும் ஏறும் !
உடற்பயிற்சியின் நன்மைகளை அறிந்து, விழிப்புடன் நம் அருமை உடலை பராமரிப்போம்
நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் மேன்மேலும் ஆரோக்கியத்தையும் நலத்தை சேகரிப்போம்!
ஆனந்த ராம்