அன்பு மகனுக்கு அப்பா அனுப்பும் சேதி
இது தன்னை தொலைத்து
தன் உயிரை தன்னக்குள் தேடும் தகப்பனின்
தன் மன புழுக்கம் ...
தவமாய் தவமிருந்து தரித்த
தன் மகனை இழந்து தனிமையில் தத்தளிக்கும்
தகப்பனின் தாளாத சோகம் ....
தன்னை தானே தனிமை படுத்திக்கொண்ட
தாரத்தை தன்னுள் சேர்க்க
தன்னால் முடியாதவனின் தாகம் ..
அன்பு மகனுக்கு அப்பா அனுப்பும் சேதி ...
அன்பு மகனுக்கு அப்பா அனுப்பும் சேதி
அப்பா இப்ப சொல்ல போறேன் உன் அப்பன் உடைஞ்ச தேதி ...
அன்பு மகனுக்கு அப்பா அனுப்பும் சேதி
அப்பா இப்ப சொல்ல போறேன் உன் அப்பன் உடைஞ்ச தேதி ...
ஆசைப்பட்டு நான் ஏங்க
அழுது அழுது உன் அம்மா ஏங்க ...
ஆறு வருசத்துக்கு அப்புறமா
ஆறுதலா வந்ததுடா … நீ வர போகும் சேதி ...
அப்பாவாக போறேன்னு ... ஆனந்த பட்டதெல்லாம் ...
ஆறாவது மாசத்துல அடி அறுத்து போனதடா ...
ஆளாக வருவேன்னு ஆசைப்பட்டு நின்னேனே ...
ஆசைப்பட்ட மனசெல்லாம் ... ஆறாத ரணமாகி போனதடா ...
ஊருக்கு உரக்க சொன்ன உன் அப்பன் ...
உருகொளஞ்சி போனேனே ... உன் உசுரு போறப்ப ...
மகனே உன் உசுரு போறப்ப ...
உள்ளுக்குள்ள அழுததெல்லாம் உன்னாலே தீருமுன்னு ....
உயிர் பிடிச்சு நின்னேனே....
உன் உசிர விட்டுபுட்டு ...என் உசுர உருக்கிபுட்ட ....
மகனே...உன் உசிர விட்டுபுட்டு ...என் உசுர உருக்கிபுட்ட ....
அன்பு மகனுக்கு அப்பா அனுப்பும் சேதி
அப்பா இப்ப சொல்ல போறேன் உன் அப்பன் உடைஞ்ச தேதி ...
அன்பு மகனுக்கு அப்பா அனுப்பும் சேதி
அப்பா இப்ப சொல்ல போறேன் உன் அப்பன் உடைஞ்ச தேதி ...
மனசுக்குள்ள அழுததெல்லாம் மாறத்தான் போகுதுன்னு ...
மனசார நினெச்சேன்னே ... நினைப்பெல்லாம் மாறாம ...மனசுலயே நின்னுடிச்சே ...
மண்ணுக்கு வருவேன்னு மனக்கோட்டை கட்டி வச்சேன் ....
மனக்கோட்டை இப்போ இங்க மண்கோட்டை ஆனதடா ...
மண்ணுக்குள்ளே மறைஞ்சு போயி ... என் மனசு ஒடைச்சு போனாயே ..
மகனே உன் மறைவாலே என் மண வாழ்க்கை மாறிடுச்சு ...
மனசெல்லாம் எல்லாம் மறுத்துடிச்சி .... உன் அப்பன் மனசு உடைஞ்சிடுச்சி ....
ஊருக்கு ஆளாக ... உள்ளுக்குள்ள பிணமாக ...
உன் அப்பன் வாழுறேன்டா.... உன்ன சேரும் நாளுக்காக ...
ஊருக்கு ஆளாக ... உள்ளுக்குள்ள பிணமாக ...
மகனே... உன் அப்பன் வாழுறேன்டா.... உன்ன சேரும் நாளுக்காக ...
அன்பு மகனுக்கு அப்பா அனுப்பும் சேதி
அப்பா இப்ப சொல்ல போறேன் உன் அப்பன் உடைஞ்ச தேதி ...
அன்பு மகனுக்கு அப்பா அனுப்பும் சேதி
அப்பா இப்ப சொல்ல போறேன் உன் அப்பன் உடைஞ்ச தேதி ...
இவன்
மகேஸ்வரன். கோ(மகோ )
2/25, திரு செங்காளியப்பன் நகர்
விளாங்குறிச்சி அஞ்சல்
கோவை -641035
+91-98438-12650