கண்ணே நீ வருவேன்னு

உன் முகத்தை பாக்கலையே
உன் சிரிப்ப கேக்கலையே
ஆனாலும் ஆள உருக்கி கொல்லுதய்யா
ஆறாத ரணமா என்ன வாட்டுதய்யா
நெஞ்சறுத்து நித்தம் எல்லாம் போகுதய்யா
நித்திரையும் என்ன வெறுத்து வாட்டுதய்யா

கண்ணே நீ வருவேன்னு
கனவெல்லாம் கண்டேனே
கனவெல்லாம் பாழாச்சு
கண்ணீரை கொடுத்து போன காட்டுக்கு
நீ கண்ணீரை கொடுத்து போன இடு காட்டுக்கு
இல்லாம எப்படி போவேன் வீட்டுக்கு
நீ இல்லாம எப்படி போவேன் வீட்டுக்கு ...

பால் முகத்தை பாக்கலியே
பால் எடுத்தும் கொடுக்கலியே
பாலூத்த நீயும் என்ன வச்சுட்டியே
பாவி மகன் பலத்த நீயும்
பறிச்சுட்டியே...

வாங்கி வச்ச கட்டு துணி
வாசம் இன்னும் போகலையே...
வாழாமா போயி நீயும் கொல்லுறியே
என் வாழ்க்கையை வாரிக்கொண்டு போகுறியே...

வயித்துக்குள்ள நீ வந்து
மாசம் பத்து ஆகலையே...
பாதியிலே நீ வந்து
மோசம் செஞ்சு போகுறியே...

உன் முகத்தை பாக்கலையே
உன் சிரிப்ப கேக்கலையே
ஆனாலும் ஆள உருக்கி கொல்லுதய்யா
ஆறாத ரணமா என்ன வாட்டுதய்யா
நெஞ்சறுத்து நித்தம் எல்லாம் போகுதய்யா
நித்திரையும் என்ன வெறுத்து வாட்டுதய்யா

கண்ணே நீ வருவேன்னு
கனவெல்லாம் கண்டேனே
கனவெல்லாம் கரைச்சுப்புட்டு
கண்ணீரை கொடுத்து போன காட்டுக்கு
நீ கண்ணீரை கொடுத்து போன காட்டுக்கு
கண்ணே நீ இல்லாம எப்படி போவேன் வீட்டுக்கு

மனம் நெறஞ்சு நின்னேனே
மகனே வருவேன்னு
மலராமே மண்ணோடு நீயும் போனதேனய்யா
மனசெல்லாம் ஆறா ரத்தம் இப்ப கொட்டுதய்யா...

உன் அப்பனுக்கு உன் நெனப்பு
அப்படியே நிக்குதய்யா
உன் ஆத்தாளுக்கு ஆழி சுழலா சுத்துதைய்யா
உன் ஆத்தாளுக்கு உன் நெனப்பு
ஆழி சுழலா சுத்துதைய்யா...

ஆறுதலா என்ன சொல்ல
அப்பனுக்கு தோணலையே
ஆளாக மீண்டு நீயும் வந்துடய்யா
உன் ஆத்தா அப்பன் உசுர வந்து
காத்திடய்யா...

உன் முகத்தை பாக்கலையே
உன் சிரிப்ப கேக்கலையே
ஆனாலும் ஆள உருக்கி கொல்லுதய்யா
ஆறாத ரணமா என்ன வாட்டுதய்யா
நெஞ்சறுத்து நித்தம் எல்லாம் போகுதய்யா
நித்திரையும் என்ன வெறுத்து வாட்டுதய்யா

கண்ணே நீ வருவேன்னு
கனவெல்லாம் கண்டேனே
கனவெல்லாம் கரைச்சுப்புட்டு
கண்ணீரை கொடுத்து போன காட்டுக்கு
நீ கண்ணீரை கொடுத்து போன காட்டுக்கு
கண்ணே நீ இல்லாம எப்படி போவேன் வீட்டுக்கு

இவன்
மகேஸ்வரன். கோ(மகோ )
2/25, திரு செங்காளியப்பன் நகர்
விளாங்குறிச்சி அஞ்சல்
கோவை -641035
+91-98438-12650

எழுதியவர் : மகேஸ்வரன். கோ(மகோ ) (21-Jun-21, 10:10 pm)
சேர்த்தது : மகேஸ்வரன் கோ மகோ
Tanglish : kanne nee varuvenu
பார்வை : 509

மேலே