வடிகின்ற குருதியிலே ஈழத்தமிழனின் கூக்குரல்

மழலையென என் தாய் மடியில் மயங்கிய நிலையில் பிறந்தேனே,
மறுஜென்மம் எடுத்து விட்டேன் என்று மகிழ்ச்சியோடு இருந்தேனே,
பற்பல கனவுகளுடன் பாசப் பிணைப்பில் வளர்ந்தேனே,
பாக்கியசாலிதான் நான் என் தாய் மண்ணில் பத்து இரவு வாழ்ந்தேனே,
பாவிகளின் நிழற்பட்டு பத்திரமாய் இம்மண்ணில் உயிரற்று வீழ்ந்தேனே,
உலகில் பிறக்கின்ற உயிரெல்லாம் ஒருபோதும் நிலைப்பதில்லை,
தமிழே! உனக்காக சொல்கிறேன் நன்றாக கேட்டுக்கொள்,
உலகில் பிறக்கின்ற உயிரெல்லாம் ஒருபோதும் நிலைப்பதில்லை,
இலங்கை களத்தினிலே பிறந்துவிட்டால் அது உயிரோடே இருப்பதில்லை,
இப்படி உதிர்ந்திடவா இம்மண்ணில் உதித்து நின்றோம்,
தமிழை சுவாசித்த கொடுமைக்கு உயிரை விடுத்துச்சென்றோம்,
பலகாலம் இங்கே பரிதவிக்கும் கூட்டம் எங்கள் இனமென்று சொல்வீர்கள்,
தமிழர்களே! பாவம் இதைத்தவிர நீங்கள் வேறென்ன செய்வீர்கள்,
உதிக்கின்ற சூரியனும் இரவில் உரங்கிடவே கடல் மடிபோகும்,
அவன் படுத்துவிட்டான் என நீ நினைத்தால் மூடா அந்நொடியே உன் உயிர் சாகும்,

மறுநாள் எழுந்து நிற்போம் கதிரவன் போல் விடியலுக்காய்,
ஒருநாள் கிடைக்கும் என்றே குரல் கொடுப்போம் எங்களின் விடுதலைக்காய்,
வரும் காலம் வசந்த காலம் வா என்போம் தீக்குரலால்,
அதில் வடிகின்ற குருதியிலே என் ஈழத்தின் கூக்குரலாம்.

எழுதியவர் : தமிழ் உதயன் (23-Jun-21, 11:56 am)
பார்வை : 45

மேலே