எடுத்திடு எதிலும் வெற்றி

இழந்ததோ ஒற்றைக் காலாம்
...இருப்பதோ இரண்டு கையாம்
இழந்ததை மறந்தே நீயும்
... இருப்பதை வைத்தே வாழ்க
இழந்ததால் குறைவே மட்டும்
... இருப்பதில் நிறையைக் காண்க
இழந்தநீ குமுறல் வீணே
... எடுத்திடு எதிலும் வெற்றி.
மரு.ப.ஆதம் சேக் அலி
களக்காடு.