படித்ததில் பிடித்தது

#திருச்சிற்றம்பலம் ...!

செற்றார்ப் புரங்கள் செற்றச் சிவன்கழலைப்
பற்றுவார் பற்றற்றார் பண்பாற் தொழுமினே.

காலனைக் காய்ந்த கறைமிடற் றண்ணலை
சீலத்தார் பரவுவார் சிந்தனை செய்மினே .

அங்கை அனலேந்தி அம்பலத்தே ஆடுவான்
திங்கள் சடையனின் சேவடி யேத்துமினே.

இருகரங் கூப்பான் இருவினை இல்லான்
திருவடித் தொழுமின் திரும்பப் பிறப்பறவே.

பெண்ணொரு பாகன் பிறப்பிலி தேவனின்
பொன்னார்த் திருவடி யேத்துமின் முத்தியதே. ..!

எழுதியவர் : பிரபுதேவா. சுபா (25-Jun-21, 8:16 pm)
சேர்த்தது : பிரபுதேவா சுபா
பார்வை : 644

மேலே