தனிமை

நேசிக்கத் தொடங்கிவிட்டேன் உன்னையும்....
ஆழ்மனதை அசைபோட்டவளாய்....
தொண்டைக்குழி அடைக்க,
கர கரத்த,
தழு தழுத்த குரலில்
விம்மி விம்மி
வார்த்தை வராதவளாய்.....
நெஞ்சில் சுமந்த நேசங்களும்
கண்ணில் சுமந்த காயங்களும்
கரையக் கண்டேன்
கண்ணீராய்...
தனிமை என்னும் நீரில்....
வஞ்சித்து போன எண்ணங்களும்
படிந்து போன பழைய எண்ணங்களும்....
படியக் கண்டேன்
தனிமை என்னும் நிலத்தில்....
மனதில் வீசிய சூறைக்காற்றும்
ஆழிப்பேரலையும் அழியக் கண்டேன்...
தனிமை என்னும் தீயில்....
காதலின் சுவாசம் வாங்கி
தேக்கி வைத்திருந்த நீங்கா நினைவுகள்
மிதக்கக் கண்டேன்
தனிமை என்னும் காற்றில்....
அத்தனை கவலைகளையும் ஒருங்கிணைத்து ஒன்று சேர்த்து
பறக்க விட்டேன்
தனிமை என்னும் ஆகாயத்தில்.....
உன்னையும் நேசிக்கத் தொடங்கிவிட்டேன்......
தனிமையில் நான்.....

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (25-Jun-21, 10:34 pm)
Tanglish : thanimai
பார்வை : 277

மேலே