புதுத் தொற்று

" *புதுத் தொற்று"*

(மா கூவிளம் கூவிளம் கூவிளம்
...மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

நேற்றுத் தொட்டது
நின்றது போனதா?
...நீண்டுத் தொற்றென
நெஞ்சிலே நின்றதே !

வேற்றுத் தொற்றதாய்
விட்டதும் பற்றிட
...வேறுத் தோற்றமாய்
வீரிடப் பாயுதே !

தோற்றே விட்டதாய்
தோழரோ ஏங்கிட
... தொற்றைக் கண்டதும்
தோல்வியில் தேம்பினர் !

போற்றும் வைத்தியர்
போய்அழ லாகுமா?
... புற்றை விட்டுமே
போய்விட லாகுமா?

( *எண்சீர்க் கழிநெடில்* *ஆசிரிய விருத்தம்)*

இரண்டாம் கொரோனா அலை முடியும் தருவாயில் ...
புதிய , உருமாறியக் கிருமி.... "டெல்டா வைரஸ்" வடிவில் வந்து பயமுறுத்துவது ....
சிகிச்சை செய்யும் மருத்துவருக்குப் பெரும் சவாலாகவே இருக்கிறது.


மரு.ப.ஆதம் சேக் அலி

எழுதியவர் : PASALI (26-Jun-21, 5:49 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 251

சிறந்த கவிதைகள்

மேலே