யென் காதல் உலகறியும்

அன்பே ஆருயிரே உன்மேல் நான் கொண்ட காதல் உலகறிந்தது

ஆயினும் அரைத்திங்களில் இருநாட்கள் உனை காணாது தவிக்கிறேன்

மூன்றாம்நாள் முகமதி முகத்தை திரையிட்டு பிறைநிலவாய் வந்து மறைவிடத்தில் பதுங்கினாய்..

பத்தாம்நாள் பாதிமுகமாய் பனியில் நனைந்தபளிங்காய் பாவையாய்நீ

பதினைந்தாவது நாள் உன்முழுநிலவு முகம் கண்டே முழுநிறைவு கொண்டது யென்மனம்...
நான் உனைநோக்க ராணிநீ நாணிசிவந்தாய்..யென்சிந்தையில் கலந்தாய்...யென்பெயர் கதிரவன் ...
நின்பெயர் மதிதானே பெண்ணே...

(மதி-நிலவு
மதிமுகம் -நிலவு போன்ற முகம்- உவமேயம்
முகமதி- முகம்(பாவை) போன்ற நிலவு -உருவகம்)

அரைத்திங்கள்- இரு வாரங்கள்
இரு நாட்கள் -- அமாவாசையும் அதற்கு
அடுத்த நாளும்

எழுதியவர் : பாளை பாண்டி (26-Jun-21, 12:28 pm)
பார்வை : 132

புதிய படைப்புகள்

மேலே