ஓர் மௌன நாடகம் அரேங்கேரும்

உன் விழி மேடையானால்
அரங்கேறும் காதல் நாடகம்
உன் விழி இசை மேடையானால்
பாடும் காதல் ராக மாலிகை
உன் விழி கவிச் சோலையானால்
புதிது புதிதாய் கவிதை எழுதும்
உன் இதயம் மேடையானால்
ஓர் மௌன நாடகம் அரேங்கேரும்
அங்கே நீ நாயகி நான் நாயகன்
வேறு பாத்திரங்கள் இல்லை !

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jun-21, 10:32 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32

மேலே