பா பாவினம் 3 ஆசிரிய விருத்தம்

பா பாவினம் காரிகை என்ற பதிவில் ஆசிரியத் துறை எனும் ஆசிரியப்பாவின்
இனப்பாவை யாப்புக் குறிப்புடனும் எடுத்துக்காட்டுகளுடனும் பார்த்தோம்.
அடுத்து ஆசிரியப்பாவின் இன்னொரு பாவினமான ஆசிரிய விருத்தம்

காரிகைக் குறிப்பு
கழி நெடிலடி நான்காய் தம்முள் அளவொத்து வருவன ஆசிரிய விருத்தமாகும்.

அளவடி --நான்கு சீர்கள்

நெடிலடி-- ஐந்து சீர்கள்

கழிநெடிலடி-- அறுசீர் எழுசீர் எண்சீர்கள்

எடுத்துக்காட்டு

சிந்துநதியின் மிசைநில வினிலே சேரநாட் டிளம்பெண் உன்னுடனே
அந்திப் பொழுதில் மெல்ல வீசிடும் தென்றல் காற்றினிலே
செந்தமிழ்ப் பாட்டினை நீபாடிட உன்மடியில் நான்தலை வைத்து
சிந்தை மயங்கி செவ்விதழ் பாடலில் என்னை மறந்திருப்பேன் !

---ஆறு சீர்கள் கொண்ட ஒரே அறுசீர்களுடன் அமைந்த ஒரே எதுகையுடனான
அறுசீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
கழி நெடிலடி நான்காய் தம்முள் அளவொத்து வருவன ஆசிரிய விருத்தமாகும்.
என்ற காரிகை விதிக்கு உட்பட்டு அமைந்திருக்கிறது

சிறப்புக் குறிப்பு : பாரதியின் பாடல் அடியை முதலடியில் எடுத்தாண்டு
பின் அடிகளை வடிவமைத்திருக்கிறேன்
யாப்பார்வலர்கள் படிக்கலாம் பயன் பெறலாம்

சிந்/துந/தியின் ---நேர் நிரை நிரை-- நிரை நடுவானா கூவிளங்கனி சீர்
ஆசிரியப்பாவில் வரக்கூடாது
ஆசிரிய விருத்தத்தில் வரலாமா ? பாவிற்குரிய விதிகள் பாவினத்திற்கு இல்லை

மேலும் சில பகுதிகள் வரும்

எழுதியவர் : கவின் சாரலன் (26-Jun-21, 7:13 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே