கனவில் தினம் மலர்கிறாய்
இதயத்தில் இருப்பவளே!
இமயமாய் கனக்கிறாய்!
உதிரத்தில் கலந்தவளே!
உதிரா பூவாக மணக்கிறாய்!
விழிகளில் விழுந்தவளே!
விந்தைகள் பல செய்கிறாய்!
கண்ணுக்குள் வரும் போது கனவை கொஞ்சம் கொளுத்துகிறாய்!
கவிதை பூக்களாய் கனவில் தினம் மலர்கிறாய்!