பஞ்சபூத குணம் - அப்பு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
காசமறுந் தந்தங் கழலாது மேகமுதல்
வீசு மனறணியும் வீரியமாம் - வாசமென
உந்திவளர் குன்மம் உதிரஞ் சொறியிவைபோம்
இந்தநறுந் தண்ணீருக் கே 2
- பதார்த்த குண சிந்தாமணி
தண்ணீரால் பித்த காசம், பித்த பிரமேகம், உடல் சூடு நீங்கும்; வெட்டுக் காயங்களில் ஏற்படும் இரத்தம் நிற்கும்; பற்கள் உறுதிபெறும், விந்து விருத்தியுண்டாகும்