பஞ்சபூத குணம் - பிருதிவி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
பூச விரணம் பொருமல்போம் பொன்முதலாம்
ஆசையுள்ள பண்டம் அதிலுண்டாம் - நேசமதாய்த்
தின்றிடிற் பாண்டு செழிக்குமிகத் தேமொழியே
சென்றுலகில் மண்குணத்தைத் தேர் 1
- பதார்த்த குண சிந்தாமணி
மண்ணை அரைத்துப் பற்றிட்டால் இரணம், வாத பொருமல் இவை அடங்கும்; மண்ணையுண்டால் பாண்டு நோய் உண்டாகும்