தமிழ்த்தாய் புகழ்

காரிகை காட்டும் வழியில் விருத்தங்கள் ஆயிரம் பாடிடவோ
பேரிகை முழங்கி உன்புகழ் உலகெல்லாம் சென்று பரப்பிடவோ
வாரிவழங் குகிறாய் வள்ளலாய் தேனமுத தீஞ்சுவை கவிதையை
தேரில் அமர்ந்து பொதிகைத் தென்றல் வீதிவரும் தமிழ்த்தாயே !

---விருத்தங்களில் கழிநெடிலடியால் ஆன (ஆறு சீர் ) ஆசிரியவிருத்தம்

காரிகைகாட் டும்வழி யில்விருத்தம் பாடிடுவேன்
பேரிகை யைமுழக்கி நான்பரப்பு வேன்புகழை
வாரி வழங்குவாய் வள்ளலாய் பாக்களை
தேரில் வரும்தமிழ்த்தா யே !

---ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

அடிதோறும் அழகிய ஒரே எதுகைகள் அமைந்திருப்பதால்
வேறு பா பாவினங்களும் சாத்தியம் என்பதை யாப்பார்வலர்கள்
அறிவீர்கள்
நாம் சேமமுற வேண்டின் தெருவெல்லாம் தமிழ் செய்வோம்
என்றான் பாரதி --சரிதானே ?
பாரதியின் கவிதையை தெரிந்தோர் சொல்லலாம்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jun-21, 9:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 30

மேலே