ஆடுபுலி

வார்த்தைகளை கட்டுப்படுத்தாத
அவர்களும்வாய்ப்புகளை
தவற விட்டவர்கள்
வாய்ப்புகளுக்கு ஏற்றாற் போல்
தன்னை மாற்றி கொண்டவர்கள்
பிறருக்கு வஞ்சம் செய்தவர்களும்
கிடைத்த வாய்ப்பை
உதாசீனப்படுத்திய அவர்களும்
போதும் என்ற மனம்
இல்லாதவர்களும்
ஆசைகளை கட்டுப்படுத்தாமல்
பேராசையாக வளர்த்தவர்கள்
வாழ்க்கை என்னும்
ஆடுபுலி ஆட்டத்தில்
இறுதியாக தோற்றுப்
போகிறார்கள்.

எழுதியவர் : முத்துக்குமரன் P (27-Jun-21, 11:09 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : Adupuli
பார்வை : 83

மேலே