சிவப்பாய் பெண்
செக்கச் சிவந்த
நிறம் வேண்டும் ...
தலை நிறைய
முடி வேண்டும் ...
குழி விழுந்த
கன்னங்களோடு ...
முத்துப் பற்களும் ...
மையிடாமலேயே
சிவந்த உதடுகளும்...
குறைந்த எடையோடு...
குறைத்த இடையும் கொண்டு...
படித்தவளாய்...
பெண் வேண்டும்
என்றான் ...
இது போன்று ...
அவள் கேட்க...
உனக்கும்
எல்லாம் இருக்கிறதா?
எனக் கேட்டபோது...
இல்லாததைத் தானே
ஒருவன் கேட்பான்...
என்கிறான்...
அப்படி எனில்
அறிவை ஏன்
கேட்கவில்லை...என்றேன்.