மருத்துவம்
" மருத்துவர் தினம் - 1.7.21 "
" சமத்துவம் " என்பதே
மருத்துவத்திலிருந்து
தோன்றியது
தானோ என்னவோ?
இனம் என்ன? குலமென்ன?
குணமென்ன? தேவையில்லை!
உயர்வு, தாழ்வு என்று ஏதுமில்லை !
நோயென்று நாடி வருவோரை,
தாய் என காத்து,
பயத்துடன் ஓடி வருவோரை,
நயத்துடன் சிகிச்சை பார்த்து,
நம்பி கை நீட்டுவோரை ,
நம்பிக்கை கொள்ள வைத்து,
மாத்திரைகளுடன் அன்பு
வார்த்தைகள் பேசி,
வலி தெரியாமல் போட்டு, 'ஊசி',
அப்பப்பா! இன்னும் என்னென்ன
சொல்ல ?
கண்ணுக்குத் தெரியாதவன் அந்த ''இறைவன்' !
கண் கண்ட தெய்வமாம், மருத்துவம் பார்க்கும் இந்த ' புனிதன் '.!
அதுவும் இந்தக் ' கொடிய கொரானா' காலத்தில் ?
கால நேரம் பாராமல்,
காலனை எதிர்த்து மனம் சோராமல்,
மனித இனத்தை காக்க,
நோய் ஏதிர்ப்பு சக்தியை
அவர் உடம்பில் சேர்க்க,
அரும்பாடு பட்டனர் ,
சிலர் தம் உடல் நலமே கெட்டனர் .
துன்பம் அல்ல ஒரு பொருட்டு ,
விலக வேண்டும் கொரானா
எனும் ' கொடிய இருட்டு ' .
என அயராது பணியாற்றுகிறீர்கள்,
மகத்தான உம் சேவையை என்ன
சொல்லி வாழ்த்த ?
வேண்டுகிறோம் இறைவனை பணிவோடு,
விரைவில் வந்து விடுவார் கனிவோடு,
மென்மேலும் உம்மை உயர்த்த அருளோடு!.
"வாழ்க மருத்துவ பணி""