வாழ்க்கை
வாழ்க்கை ஒரு முறைதான்
வாழ உனக்கு கற்று கொடுக்கும்
அதில் இன்பமும் துன்பமும்
சேர்ந்தே வாழ்ந்து விடு
உன்னை சுற்றிய அழகு
உனக்கானதுதான் அனுபவி
காற்று இருக்கும் வரை
சுவாசித்து விடு உனக்குள்
மழை பொழியும் போது
நீ நனைந்து விடு
தேகம் காய சூரியனை
கட்டி அணை
கனிகள் படைத்ததே
உன் பசிக்குத்தான்
ஆசைக்கு தடைஏது
ஆணும் பெண்ணும் இல்லையெனில்
இந்த உலகம் ஏதடா

