எல்லாமே தொலை தொடர்பு என்றால்
எல்லாமே தொலை தொடர்பு என்றால் !
முகம் அறியா
உறவுகளின் முகங்கள்
முக நூலில் அறிமுகமாகத்தான்
செய்கிறது
ஆனால் !
முகம் அறிந்த
உறவுகளும் நண்பர்களும்
கூட
முக நூலில்
சந்திப்பதாய் விலகி
செல்கிறார்களே
வெளி காற்றை
முகத்தில் வாங்கியபடி
கூடி பேசி
இதே உறவுகளும்
நண்பர்களும்
மகிழ்ந்த நிகழ்வுகள்
மறைந்து போய்
தொடர்புகள் எல்லாமே
கையடக்க
சொல் பேசி என்றான
பின்பு !
உறவுகளின் பெயர்கள்
கூட இனி
வாட்ஸப், பேஸ்புக்,
டிவிட்டர்
இவைகளுடன் இணைத்து
அழைக்கும்
காலம் வந்து விடுமோ?