வியப்பே வியப்பு
அன்னையை அனாதை ஆக்கியது வியப்பு;
அவரை
அனாதை இல்லத்தில் தள்ளியதும் வியப்பு;
அந்திப் பொழுதில் அல்லி பூசிய செந்நிற வானம் வியப்பு;
சொல்லித்தந்த பொழுதும் வியப்பு;
ஆசையை வெல்ல தவிப்பது வியப்பு;
ஆகாயத்தில் பறப்பதும் வியப்பு;
இருளுக்கு ஒளி வியப்பு;
இரக்க மற்ற குணத்தில் ஈரமும் வியப்பு;
உறங்காத விழியின் கனவும் வியப்பு;
உப்பினுல் உவர்ப்பு தேடுவதும் வியப்பு;
உருண்ட நாட்கள் திரும்பும் என்பதும் வியப்பு;
உறவுக்கு பிரிவு வியப்பு;
ஊமைக்குச்சொல் வியப்பு;
ஊதாத குழல் வியப்பு;
எடுப்பான மூக்கில் எட்டிய நாக்கும் வியப்பு;
எழுதியக் காதல் எட்டிப்பிடிக்கும் என்பதும் வியப்பு;
ஐம்புலன்களின் ஆட்டமே வியப்பு;
ஒடிந்தகால் நடனமாட ஓடுவதும் வியப்பு;
ஒட்டாத பொட்டும் வியப்பு;
ஓடிய ஓடையின் தடம் காண தவிப்பது வியப்பு;
ஓளவையின் ஆத்திச்சுவடி பொய்ப்பதும் வியப்பு;
அக்(ஃ) கரையில்லா கடலும் வியப்பு
கற்கண்டு கசப்பதும் வியப்பு;
கட்டாந்தரையில் நீர் தேடுவது வியப்பு;
கணைக்காத குதிரையும் வியப்பு;
கசந்திட்ட வாழ்வும் வியப்பு;
கழுதையின் கணைப்பில் சுரம் தேடுவதும் வியப்பு;
குடைந்த வண்டும் வியப்பு ;
கொழைந்து பேசும் வாயில் நஞ்சும் வியப்பு;
கோழையின் சிரிப்பும் வியப்பு;
காற்றுச் சென்ற திசை வியப்பு;
கிளியின் மூக்கில் கீறிய பழமும் வியப்பு;
குழந்தையின் காலடி மறப்பதும் வியப்பு;
குதிரையின் குழம்படி வியப்பு;
கூந்தல் நிறம் மாறுவதும் வியப்பு;
கேட்காதா பாடலுக்கு தாளமும் வியப்பு;
சட்டங்கள் குறட்டை விடுவது வியப்பு;
சண்டை சச்சரவு இல்லாத
சம்சார வாழ்க்கை நீடிப்பதும் வியப்பு;
சாய்ந்த கோபுரமும் வியப்பு;
சாயாத உடலும் வியப்பு;
சாகாத வரமும் வியப்பு;
டம்லரின் விளிம்பில் வாயின் சுவையும் வியப்பு;
நட்ட பயிரின் நுனியில் நனைந்த பனியும் வியப்பு;
வெற்றியின் விளிம்பில் தோல்வியும் வியப்பு;
வேதனையில் சோதனையும் வியப்பு;
நுறையின் முனியில் நுளைவதும் வியப்பு;
நூலின் முடிச்சியில் சிக்கிய சிக்கலும் வியப்பு;
நொங்கின் கண் வியப்பு;
நொண்டியின் கால்கள் ஓடத் துடிப்பதும் வியப்பு;
யுவத்தின் ஓட்டம் வியப்பு
யூ டுயுப்பில் பார்த்த படமும் வியப்பு;
இரம்பையின் அழகில் மயங்காதவன் வியப்பு
ரவுக்கையில் கை புகுந்த தடயமும் வியப்பு
ரீங்கரிக்கும் வண்டுறங்கிய பூ மேடையும் வியப்பு;
லயத்திட்ட கண்ணின் புரையும் வியப்பு;
இலட்சிய புருசனின் அலட்சியமும் வியப்பு;
பசிக்காத வயிறு வியப்பு,
பாம்பின் கால் வியப்பு,
பாயாத புலி வியப்பு,
பாலுக்குள் கலரும் வியப்பு,
பலுனுக்குள் காற்றும் வியப்பு,
ரூபத்தின் பிம்பம் வியப்பு,
ரூபாயின் மதிப்பும் வியப்பு,
முட்டியக் காளையைத் தட்டித் தழுவதும் வியப்பு,
தொழுதக் கையைக் கட்டிப்போடுவதும் வியப்பு,
முடிந்த வாழ்க்கையில் துவக்கத்தைத் தேடுவதும் வியப்பு,
கருவறை கல்லறையானது வியப்பு;
சில்லரை சிரிப்பதும் வியப்பு,
சிற்றெறும்பு சினந்ததும் வியப்பு,
சிக்கலில் சிக்கலைத் தேடுவது வியப்பு;
சிதைந்த உடம்பில் சிற்றின்பம் தேடுவதும் வியப்பு;
நொடிப் பொழுது உணவில்
நோய் உண்டு என்று அறியாது உண்பதும் வியப்பு;
பாருக்கும் பார்லருக்கும் போகும் குடும்பமும் வியப்பு;
கோக்குடன் சாப்பிட துடிக்கும் கூட்டமும் வியப்பு;
மாலுக்குள் போக மல்லுகட்டுவதும் வியப்பு;
மசாஞ் செய்ய ஸ்பாக்குள்
படையெபடுப்தும் வியப்பு;
கோவிலிலும் குடும்பத்திலும் தேடாத தேவதையை
மாலிலும் தெருவிலும் திரிந்து தேடுவது வியப்பு;
நோயாளியின் நினைப்பும்
நீண்ட ஆயிளும் வியப்பு;
பர்கரில் கண்ட புழுவும் வியப்பு;
பனிப் பூக்கள் படர்வதும் வியப்பு;
பாயாசத்தில் புளிப்பும் வியப்பு;
புல்லாங் குழலில் இசை மிதப்பது வியப்பு;
சுத்தும் உலகமும் வியப்பு;
சூரியக்குடும்பமும் வியப்பு;
சேவையில் இலாபம் காண்பது வியப்பு;
சோம்பலில் சோர்வு வியப்பு;
சௌபாக்கிய வாழ்க்கை வியப்பு;
வெற்றியின் விளிம்பில் தோல்வியும் வியப்பு;
வேதனையில் சோதனையும் வியப்பு;
தத்தும் சிட்டுக்கு சத்தமும் வியப்பு;
நாரை நனைந்திடும் என்ற ஏக்கமும் வியப்பு;
கொக்கு கொத்திய மீனைத் தேடுவது வியப்பு;
மரங்கொத்தியின் அலகு சிவப்பதும் வியப்பு;
படர்ந்த பனியில் பாதையைத் தேடுவது வியப்பு;
பறந்த பறவையை பார்க்கத் துடிப்பதும் வியப்பு;
பசித்த வயிறுக்கு கால்வாய் சோறும் வியப்பு;
ருசித்த குழம்பில் கடித்த கல்லும் வியப்பு;
பழுத்த பழத்தில் புழுவின் ஆர்பரிப்பு வியப்பு;
முடிந்த கூந்தல் பறப்பது வியப்பு;
பின்னிய கூந்தல் தலையிருந்து மறைந்தது வியப்பு;
மின்னிய கூந்தல் மெலிந்ததும் வியப்பு;
கொட்டிய அழகை கொத்தியதும் வியப்பு;
ஆணின் முடியில் ஆயிரம் வர்ணம் வியப்பு;
அணிலின் கோடும் ஆட்டின் வாலும் ஆடவன்
தலைமேல் வந்ததும் வியப்பு.
தூக்குச் சாப்பாடு மறைந்தது வியப்பு;
குத்து விளக்கும் மாடத்தில் அகலும் அசைந்த காலம் வியப்பு;
குத்து சண்டையும் குடிகெடுக்கும் சீரியலின் கும்மாளமும் வியப்பு;
குலவிளக்கு குடும்ப வழக்கில் வாழ்வைத் தொலைத்ததும் வியப்பு;
மறைவிடத்தில் கழித்த மலம் மாடிவீட்டுக்குள் புகுந்ததும் வியப்பு;
மறைத்த தடமும் மலர்ந்த இடமும் தடையின்றி திறந்ததும் வியப்பு;;
பிறந்த உடையை வளர்ந்தும் பிறர் பார்க்க விடுவது வியப்பு;
மாமன் மடியில் பெய்த சிறுகுழந்தையின் நீர்
கால்சட்டைக்குள் சினகிக்குள் சிறைப்பட்டது வியப்பு;
சுகாதாரம் சுத்தமெல்லாம் சுவையென்று
பாக்கட்டினுள்பார்வை உணவானதும் வியப்பு;
வீட்டு உணவு வீதிக்கு வந்ததும் வியப்பு;
அது வீட்டுக்கே டோர் டெலிவரியாவதும் வியப்பு;
பசும்பாலில் பவுடர் கலந்து பாக்கட்டில் புகுந்ததும் வியப்பு;
மின் துவைப்பானுக்கு கைகள் அடிமையானதும் வியப்பு;
மிக்சி கிரைண்டர் பிளண்டர் குக்கருக்குள்
சுவைகள் சிறையானதும் வியப்பு;
முல்லைக்கு தேர் வியப்பு
விதையில்லாச் செடி முளைத்தது வியப்பு
பாட்டியின் பல் வியப்பு
பாட மறந்தச் சொல் வியப்பு
திருடிய கைகளின் நடுக்கம் வியம்பு;
திரும்பாத திசையில் திருப்பத் துடுப்பதும் வியப்பு
நட்பில் வெறுப்பை காண்பது வியப்பு
நட்பால் தவிப்பதும் வியப்பு
நட்பில் பேதம் பார்பதும் வியப்பு
நட்பே பேரம் போவதும் வியப்பு
நட்பே நஞ்சாவது வியப்பு
நட்பு பூ உதிர்வதும் வியப்பு
மின் அஞசல் நட்பு மின்னலாய் மறைந்ததும் வியப்பு
பேனா நட்பு மைபோல் மறைந்ததும் வியப்பு
வாட் சாப் நட்பில் விரல்களின் ஓட்டமும் வியப்பு
கொத்திய கொண்டை கொடி மரமானது வியப்பு;
கட்டிய சோறு காற்றாய் போனது வியப்பு;
கொட்டிய மழை டேங்கரில் நிற்பது வியப்பு;
உருண்ட காலத்தை திரும்பப் பெற விரும்புவதும் வியப்பு;
தொப்புள் கொடி உறவு தொலை தூரத்ததில்
தொலை பேசிக்குல் நேரம் தொலைந்ததும் வியப்பு;
கைபேசியியை கைக்குள் வைத்து பாதையைக் காண்படும் வியப்பு;
முக நூலில் முழு நேரமும் மறைந்தது வியப்பு;
பாலியல் மாற்றி லைக் போட்டதும் வியப்பு,
மின் அஞ்சலில் முனவரியைத் தொலைத்ததும் வியப்பு,
வீட்டில் உறவை உதரி டுவிட்டரில் பாடுவதும் வியப்பு,
கைபேசியும் எமனுக்கு துணை போவதும் வியப்பு,
வீதியில் பேசி வீடு திரும்பாது உயிரை கொடுப்பதும் வியப்பு,
கணிப்பொறியில் காலம் கழித்து
வாழத் துடிப்பதும் வியப்பு;
வாழ்ந்திட்ட நாட்களை வாட்சப்பில் தொலைத்து;
ஓயந்திட்ட நாளில் ஒவ்வொரு துணையையும் உறவையும்
தேடத் துடிப்பதும் வியப்பு.