சூறாவளித் தென்றல்

சூறாவளித் தென்றல்

பெண்ணை
தென்றலென எண்ணி
சீண்டிப் பார்க்காதே...
அவள்
அனல் காற்றானால்
அலறிப் போவய்...
சூறாவளியானால்
சூறையாடப் படுவாய்...
புயலாய் மாறினால்
புண் பட்டுப்போவாய்...
பனிக் காற்றானாலும்
பதம் பார்க்கப் படுவாய்...
-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (30-Jun-21, 9:46 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
பார்வை : 55

மேலே